சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      சேலம்

சேலம் மாவட்டம், அறநூத்துமலை மலைப்பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, நேற்று (07.11.2017) ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் பின் கலெக்டர் தெரிவித்ததாவது.

 

 

கலெக்டர் தகவல்

 

 சேலம் மாவட்டத்திலுள்ள மலைக்கிராம மக்களின் மேம்பாட்டிற்காக தற்பொழுது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அறநூத்துமலை பகுதியில் ஊரக வளர்ச்சி, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, ஆலடிப்பட்டி ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இயங்கும் உண்டு உறைவிட பள்ளி, தங்கும் விடுதி, சமையல் கூடம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் குறைவான புத்தங்கங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நூலகத்தில் அதிக புத்தங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு புதியதாக வாங்கி வைத்திட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் பகுதிகள் அனைத்திலும் இணைப்பு சாலைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் தூய்மையை பேணி பாதுகாப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டில் தனிநபர் இல்லக்கழிவறை கட்டுவதற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. எனவே இங்கு உள்ள அனைத்து வீடுகளிலும் தனியாக கழிவறை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மீண்டும் குறிப்பிட்ட நாட்களுக்கு பின் இங்கு வந்து, தனிநபர் இல்லக்கழிவறை கட்டப்பட்டதை உறுதி செய்ய உள்ளேன்.இங்கு உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் மருத்துவ வசதி கோரி கோரிக்கை வைத்தனர். அறநூத்துமலைப்பகுதியில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கூடுதலாக மருத்துவ வசதிக்குக்காக நடமாடும் மருத்துவ வசதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அருள்ஜோதிஅரசன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வம், திட்ட அலுவலர் (ஆதிதிராவிடர் நலன்) பி.டி.சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.சரவணகுமார், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து