கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.46,72,000- மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      கடலூர்
govt free laptop issue by minister mc sampath

கடலூர் மாவட்டம் வடலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 365 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.46,72,000- மதிப்பீட்டிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,  தலைமையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்   வழங்கினார்.  இவ்விழாவில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  பேசியதாவது. 

விலையில்லா மடிக்கணினிகள்

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைசிறந்த நிகழ்வான உலக தரத்திற்கு ஒப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையில்லா கல்வியும், தரமான கல்வியும் முக்கிய காரணமாகும். இதன் காரணமாக  புரட்சித்தலைவி அம்மா  தேர்தல் நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இவ்வாண்டும் மாணவ செல்வங்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவச் செல்வங்களின் வயிற்றுப்பசியினை போக்க சத்துணவு திட்டம் செயல்படுத்துவது போல அறிவுப்பசியை போக்கிட விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மடிக்கணினிகள் மிகவும் தரமானதாக நீடித்து உழைக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது. இக்கணினிகள் மூலம் மாணவச் செல்வங்கள் தேவையான கருத்துக்களையும், ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விரல் நுனியில் அறிந்து கொள்ள இயலும். மாணவ மாணவிகள் மடிக்கணினியை கல்வி சார்ந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இவ்விழாவில்  கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ப.சுப்ரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சங்கமித்திரை, வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆர்.திருமுருகன், ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து