முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் அமைச்சர் எம்.சி.சம்பத் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      கடலூர்
Image Unavailable

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை கடலூர் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   முன்னிலையில்  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்  தெரிவித்ததாவது.மேட்டூர் அணையிலிருந்து 02.10.2017 அன்று பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையினை வந்தடைந்து, கல்லணையிலிருந்து 05.10.2017 அன்று திறக்கப்பட்ட தண்ணீர் 16.10.2017 அன்று கீழணையை வந்தடைந்தது. கீழணை வந்தடைந்த தண்ணீர் தேக்கப்பட்டு 26.10.2017 அன்று பாசனத்திற்காக வடவார் மூலம் வீராணம் ஏரிக்கு திறந்தவிடப்பட்ட தண்ணீரை படிப்படியாக தேக்கி வைத்து இன்று பாசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது.

பாசனத்திற்கு தண்ணீர்

இராதா வாய்க்கால் மதகு வழியாக வினாடிக்கு 10 கன அடி வீதமும், வீராணம் புதிய மதகு வழியாக வினாடிக்கு 25 கன அடி வீதமும், இதன் தொடர்ச்சியாக வீராணம் ஏரியிலுள்ள அனைத்து 34 மதகுகளும் திறக்கப்பட்டு அனைத்து மதகுகளும் சேர்த்து மொத்தம் வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்படும். இதன் மூலம் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டங்களை சேர்ந்த 102 கிராமங்களில் உள்ள மொத்தம் 44,856 ஏக்கர் பாசன பரப்புகள் பயனடையும். மேலும், அவ்வப்போது பாசன தேவைக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றியமைக்கப்பட்டு அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பி.அன்பரசு, உதவி செயற்பொறியாளர் அருணகிரி, வேளாண்மை இணை இயக்குநர் நாட்ராயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பாத்திபன், பாஸ்கரன், ஐயப்பன், சண்முகம் மற்றும் வீராணம் ஏரி விவசாய சங்க தலைவர் பாலு, இராதா வாய்க்கால் பாசன தலைவர் ரங்கநாயகி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து