100 சதவீதம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சியடைய செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்கள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      கன்னியாகுமரி
kanyakumari collector

கன்னியாகுமரி கலெக்டர்சஜ்ஜன்சிங் ரா.சவான்    கடந்த கல்வியாண்டில் (2016-17), 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர்களை, 100 சதவீதம் தேர்ச்சியடைய செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை, நாகர்கோவில், பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில்  வழங்கி தெரிவித்ததாவது:-

பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம், கல்வியில், சிறந்த இடம் எட்டியுள்ளது.  ஏனென்றால், நமது மாவட்டத்தில், அதிகமாக படித்தவர்கள் உள்ளார்கள்.  குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்தவர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றி வருவார்கள்.  ஏனென்றால், அந்த மாணவ செல்வங்களுக்கு, கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் முயற்சி அதிகளவு இருந்தது தான் காரணம்.  இன்று நாகர்கோவில் கல்வி மாவட்ட அளவில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவ, மாணவியர்களை, 100 சதவீதம் தேர்ச்சியடைய செய்த ஆசிரியர்களுக்கு, அவர்களது பணிகள் மற்றும் அர்ப்பணிப்புக்காக, 1545 ஆசிரியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை வழங்கி, அவர்களை ஊக்குவிக்கப்பட்டது.  இனிவரும் காலங்களிலும், மாணவ, மாணவியர்கள்; 100 சதவீதம் தேர்ச்சி பெற, அந்தந்த பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்து, நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  செ.பாலா, பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள்                  த.ஆறுமுகம் (நாகர்கோவில்),  பி. மரிய தங்கராஜ் (தக்கலை (பொ)),                                சி. லெட்சுமணசாமி (குழித்துறை (பொ)), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்  பி. நடராஜன், குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்  ஜி.கிஷோர், கோட்டார், குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர்ஃமுதல்வர்  எஸ். சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து