பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணி: மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      சேலம்
6 a

 

பொலிவுறு நகரம் (ளுஅயசவ ஊவைல) திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் மண் பரிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ரெ. சதீஷ் ஆய்வுசெய்தார். பொலிவுறு நகரம் திட்டத்திற்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 20.09.2016 அன்று மத்திய நகர்புற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் சேலம் மாநகராட்சியில் இரண்டு பிரிவுகளாக செயல்படுத்தப்பட உள்ளது.

மண் பரிசோதனை

சேலம் மாநகரில் பகுதி அடிப்படையில் அபிவிருத்தி செய்தல் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், வ.உ.சி. மார்க்கெட் பகுதிகளை உள்ளடக்கி 690 ஏக்கர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை உள்ளடக்கிய முழுமையான உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பகுதி அடிப்படையில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போக்குவரத்து மேலாண்மை , பேருந்து முணையம் அபிவிருத்தி செய்தல் , நவீன வாகன நிறுத்தம் அமைத்தல் , பொதுப் போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல் , சாலை வடிவமைப்பு மற்றும் மறு வடிவமைப்பு பணிகள் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தானியங்கி சிக்னல்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசு கட்டிடங்கள் வணிக வளாகங்கள் , வ.ஊ.சி. அங்காடியினை புதுப்பித்தல் , திருமணி முத்தாறு அபிவிருத்தி திட்டம், போஸ் மைதானம் அபிவிருத்தி பணிகள், தகவல் பலகை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்தல் , மின் சேமிப்பு, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல் மற்றும் குடிநீர் திட்டம், மழைநீர் வடிகால் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் ஜி. காமராஜ், உதவி பொறியாளர் எம். சுமதி, கே. செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து