முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபியில் ரீடுமாஸ் தொண்டு நிறுவனம் சார்பில் 100 சுய உதவி குழுக்களுக்கு கடன் தொகையை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      ஈரோடு
Image Unavailable

கோபியில் நடைபெற்ற விழாவில் இந்தியன் வங்கியின் சார்பில் 100 கூட்டுபொறுப்புக்குழுக்களுக்கு ரூ.2 கோடி கடன் தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

இந்தியன் வங்கியின் கோபிசெட்டிபாளையம் கிளையின் சார்பில், கலராமணியில் உள்ள ரீடுமாஸ் தொண்டு நிறுவனம் மூலம்  கூட்டுபொறுப்புக்குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா தொண்டு நிறுவனத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ரீடுமாஸ் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் கலந்து கொண்டு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி பகுதியில் உள்ள 100 கூட்டுபொறுப்புகுழுவிற்கு ரூ.2 கோடியே 10 லட்சம் தொழில் செய்வதற்கான கடன் தொகையை வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும் போது, ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது, பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக அதிக அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கி கடன்களை வழங்கினார். இதன் மூலம்  பல்வேறு தொழில்களை செய்து வாழ்க்கையில் உயர்ந்தனர். தமிழ்நாட்டில் 1 லட்சம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். இங்கு கடன் கொடுக்கப்படும் குழுக்களுக்கு எளிதில் முன்னேற்றம் அடையும் வகையில் பயிற்சிகள்  கொடுக்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் இந்த அரசு பல்வேறு மக்கள் திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க சிரமமப்படுவதை தவிர்க்க மாணவர்களுக்கு 16 வகையான பொருட்களை வழங்கினார். இதன் மூலம் அவர்களின் சிரமம் தீர்க்கப்பட்டது. தமிழக மக்களின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றும் திட்டம் இந்த அரசிடம் உள்ளது. மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வழிகாட்டும் வகையில் உதவி மையம் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமையும். இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

அதை தொடர்ந்து  பத்திரி’கையாளர்கள் சந்திப்பின் போது, நாளை  புதிய பாடதிட்ட தொகுப்புகள் வெளியிடப்பவுள்ளன,அதில் 1---,6,9,11 வகுப்புகளுகு பதிய பாட திட்டங்கள் மற்றப்படும் அடுத்த  ஆண்டு 2,7,10,12 வகுப்புககும் 2020 மற்றும் 21 ல் 3,4,5,8 போன்ற வகுப்புகளுகு பாட திட்டங்கள் மாற்றப்படும் என தெரிவித்தார், விழாவில், இந்தியன் வங்கியின் கோவை மண்டல மேலாளர் மகேந்திரா, கோபி கிளை மேலாளர் விஜயக்குமார் மற்றும் பல்வேறு கிளை மேலாளர்கள், அதிகாரிகள் ரீடுமாஸ் சட்ட ஆலோசகர் ஆனந்தபத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ரீடுமாஸ் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட கழக துணைச்செயலாளர் சுலோச்சனாநடராஜ், முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்துரவிச்சந்திரன், கோபி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன், மாணவர் அணி செயலாளர் பிரினியோ கணேஷ்,வேலுமணிநகர் வார்டு செயலாளர் செல்வராஜ் இறுதியில் ரீடுமாஸ் தலைவர் கே,ஏ,ஆனந்தன் நன்றியுரையாற்றினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து