முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலைமைச்சர் உத்தரவின் பேரில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி-தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது.கடந்த மாதம் விவசாயிகளின்  கோரிக்கையை ஏற்று 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.தற்போது தேனி மாவட்டம் 18&ம் கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள் நேற்று 6 மணிநேர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தங்கள் பகுதிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் பாசனத்திற்காக நேற்று முதல் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்&அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.இதனையடுத்து நேற்று காலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து மேலூர் பகுதி விவசாயத்திற்காக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது.இந்த தண்ணீர் திருமங்கலம் பிரதான கால்வாயில் 200 கனஅடியும் பெரியாறு பிரதான கால்வாயில் 700 கன அடியும் பிரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை திருமங்கலம் பகுதி விவசாயித்திற்காக வினாடிக்கு 800 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீரை கூடுலதாக 100 கனஅடி சேர்த்து  வினாடிக்கு 900 கனஅடியாக உயர்த்தப்பட்டது.வைகை அணையில் இருந்து நேற்று காலை முதல் மொத்தம் 1800 கனஅடி தண்ணீர் விவசாயத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.மழையின்றி வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு குறைந்துவிட்ட நிலையில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து