தென்காசியில் கலையருவி திருவிழா செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 நவம்பர் 2017      திருநெல்வேலி

தென்காசியில் நடைபெற்ற கலையருவி 2017 திருவிழாவில் எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டார்.

கலையருவி  திருவிழா

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தென்காசி எம்.கே.வி.கே. பள்ளியில் கலையருவி 2017 திருவிழாநடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ரதிபாய் தலைமை வகித்தார். முதன்மை ஒருங்கிணைப்பாளர் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் வரவேற்றுப்பேசினார். போட்டிகளை தென்காசி எம்.எல்.ஏ.,செல்வமோகன்தாஸ் பாண்டியன் துவக்கி வைத்துபேசினார். பரதநாட்டியம், தனி நடனம், குழு நடனம், ஒயிலாட்டம், கரகாட்டம், மீம்ஸ், நகைச்சுவை உள்ளிட்ட 90 வகையான போட்டிகள் நடைபெற்றன. துவக்க விழா நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் சங்கரபாண்டியன், அரசு வக்கீல்கள் மேலகரம் கார்த்திக்குமார், சின்னத்துரை பாண்டியன், முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் சுடலை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளகால் ரமேட்ஷ, நகர நிர்வாகிகள் முருகன்ராஜ், வெள்ளப்பாண்டி, கசமுத்து,கட்டிக்காதர், முத்துக்குமாரசாமி, சுப்புராஜ், செல்லத்துரை பாண்டியன், செந்தூர் பாண்டியன், காமராஜ், சுடலைமணி, கோட்டியப்பன், பொன்மணி, பொன்னுத்துரை, முத்துராஜன் மற்றும்பலர் கலந்துகொண்டனர். முடிவில் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் செந்தூர்பாண்டியன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து