தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற காதுகேளாத மாற்றுத்திறனாளி மாணவ,மாணவிகளுக்கு நெல்லையில் வரவேற்பு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      திருநெல்வேலி
nellai kaadhu kelatha maanava maaanavikaluku varaverpu

ராஞ்சியில் நடைபெற்ற தேசிய  அளவில் பதக்கங்கள் வென்ற காதுகேளாத மாற்றுத்திறனாளி  மாணவ,மாணவிகளுக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது

தேசிய  அளவில் பதக்கங்கள்

ஜார்கண்டு மாநிலம் ராஞ்சியில் இந்த மாதம் 1ஆமா தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலானா தடகளம் மற்றும் விளையாடடு போட்டிகளில் நெல்லை காது கேளாதோர் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர் , இவர்களில் ஜூனியர் ஷாட்புட்டில் தஸ்லிம் நிஷா,ஜூனியர் டிரிபிள் ஜம்பில் முகம்மது பிலால்,சீனியர் டிரிபிள் ஜம்பில் மணத்துறை  ஆகியோர் முறையே தங்கப்பதக்கம்,வெள்ளி பதக்கம்,வெண்கல பதக்கம் பெற்றனர் இவர்களோடு மாணவிகள் சசிகலா, கோல்டு காட்வின்,ராதிகா,இசக்கியம்மாள்,பானுபிரியா, அனிதா,வாசவி ஆகிய மாணவிகள் மற்றும் மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்று பெருமை சேர்த்தனர் ,பதக்கம் வென்ற இவர்கள் ரயில் மூலம் நெல்லை வந்தனர் ,நெல்லை வந்த இவர்களை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாரன்ஸ் சுவைன்சன் காது கேளாதவர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் , நெல்லை மாவட்ட வயது வந்தோர் காது கேளாதவர் சங்க மாவட்ட தலைவர் கணபதி, துணை தலைவர் மெய்யாசாமி, சங்க மாவட்ட பொது செயலாளர் அரசமுத்து ,துணை செயலாளர் தேவகுமார் , பொருளாளர் இம்மானுவேல் ஆகியோர் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.நிகழ்ச்சியில் காது கேளாதோர் பள்ளி தாளாளர் அருள் சாமுவேல்,உடற்கல்வி ஆசிரியர் ஸ்டாலின் மற்றும் மாணவ ,மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து