முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் தலைவராக ராகுல் 16ம் தேதி பொறுப்பேற்பு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி பொறுப்பேற்கிறார்.
 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த 17 ஆண்டுகளாக அப்பதவியில் உள்ளார். சமீபகாலமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் துணைத் தலைவராக இருந்துவரும் ராகுல் காந்தியை தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்கள் நடந்து முடிந்ததையடுத்து, தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு கடந்த 1-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ராகுல் காந்தி கடந்த 4-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் தாக்கலான 89 வேட்புமனுக்களும் ராகுலை தலைவர் பதவிக்கு அறிவிக்கக் கோரியே தாக்கல் செய்யப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் 16-ம் தேதி தேர்தல் நடக்கும் என்றும் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மனுக்களை வாபஸ் பெற 11-ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ராகுலைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வரும் 16-ம் தேதி சோனியா காந்தியின் முன்னிலையில் ராகுலிடம் வழங்கப்படும் என்று கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். உடனடியாக கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்றும் பின்னர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நாடு முழுவதையும் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் சந்திப்பார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து