முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2022 12 29

தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய  வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு துண்டு அணிவித்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வைத்தியலிங்கம், நான் எதிர்பார்த்தது, எதிர்பார்த்ததை விட தன்னை அதிகமான அளவிற்கு தன்னை இந்த இயக்கத்திற்கு ஒப்படைத்து, இந்த இயக்கத்திற்கு சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது.

வைத்திலிங்கத்தை பல நேரங்களில் பார்த்ததுண்டு. மறைந்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தலைமையில் வைத்திலிங்கம் பணியாற்றியபோது அவர்களுக்கு விசுவாசமாக இருந்து, சிறப்பாக சுறுசுறுப்பாக எல்லாரையும் கவரும் வகையில் அவர் பணியாற்றிய அந்த காட்சியும் நான் பார்த்ததுண்டு.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. கட்சி என்பது உடைந்து அது சின்னாபின்னமாகி இருந்த நிலையில் அப்பொழுது அவர் சட்டப்பேரவையில் அமர்ந்த காட்சியையும் பார்த்தது உண்டு. அவர் முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எதையோ பறி கொடுத்தது போல அமர்ந்திருப்பார்.

ஏதோ வேண்டாவிருப்பாக சில கேள்விகளைக் கேட்பார். இதைப் பல நேரங்களில் பார்த்ததுண்டு. ஆக அது என்ன என்பது இப்போது புரிந்துள்ளது. சுயமரியாதையோட நாம் இருக்க முடியவில்லை, சுயமரியாதையோடு பணியாற்ற முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளத்தில் இருந்து உள்ளது.

என்ன அவர் லேட் ஆக வந்துள்ளார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்ற உள்ளார். அதுதான் நமக்கான மகிழ்ச்சி. தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி நெருங்கக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெறப்போகிறோம் என்பது யாருக்கும் எள்ளளவு சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

தேர்தல் பணியாற்ற உறுதி ஏற்போம், சபதம் எடுப்போம், மீண்டும் திராவிட மாடல் அரசு உதயமாகி ஏற்கெனவே செய்த சாதனைகளை மிஞ்சக் கூடிய அளவிற்கு மேலும் பல சாதனைகளை உருவாக்கி தருவதற்கு நம்முடைய பணி மும்முரமாக இருக்க வேண்டும். வெல்லும் 200, படைப்போம் வரலாறு, வெல்லுவோம் ஒன்றாக என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து