முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2026      இந்தியா
Murmu 2023 04 18

புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அந்த மசோதாவில், பத்திரப்பதிவு செய்யப்படும் சொத்து மூதாதையர் சொத்தாக இருந்து மூலப்பத்திரம் இல்லையெனில் வருவாய்த்துறையின் பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சொத்து அடமானத்தில் இருந்தால் அடமானம் பெற்றவரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்து போயிருந்தால், காவல்துறையில் புகாரளித்து ‘கண்டறியமுடியவில்லை’ என்ற சான்றிதழ் பெற வேண்டும் என்றும், உள்ளூர் நாளிதழில் விளம்பரம் செய்து அதனையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து