முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ்: அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு

புதன்கிழமை, 13 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

டாமாஸ்கஸ் :  சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு நேரடியாக போரில் ஈடுபட்டது.

தீவிரவாதிகள் மீண்டும் தலைதூக்கினால் அவர்கள் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவோம்”
 -ரஷ்ய அதிபர் புடின்-

ரஷ்யாவின் உதவி காரணமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை அதிபர் ஆசாத் மீட்டுள்ளார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் சிரியா சென்றார். அங்கு லத்திகா பகுதியில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் அவர் பேசியபோது, “சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். எனவே இங்கு முகாமிட்டுள்ள ரஷ்ய படைகளில் பெரும் பகுதி வாபஸ் பெறப்படும். தீவிரவாதிகள் மீண்டும் தலைதூக்கினால் அவர்கள் எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

சிரியாவைத் தொடர்ந்து எகிப்துக்கு சென்ற அதிபர் புடின் அந்த நாட்டு அதிபர் சிசியை சந்தித்துப் பேசினார். அப்போது எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிப்பது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். ஜெருசலேம் விவகாரம் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

பின்னர் துருக்கி தலைநகர் அங்காராவுக்கு சென்ற புடின் அந்த நாட்டு அதிபர் எர்டோகனை சந்தித்துப் பேசினார். இருவரும் அளித்த பேட்டியில், “இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்ததன் மூலம் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் முடிவை ஏற்கமாட்டோம்” என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து