பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா துப்புரவு பணிகள் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      திருநெல்வேலி
nellai collector Government Hospital Inspection

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொக துப்புரவு பணிகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி,   அதிகாலையில் மருத்துவமனையின் பல்வேறு பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துப்புரவு பணிகள்

டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மை ஒழிப்பு பணியாளர்களிடம் மருத்துவமனை வளாகத்தினை மிக தூய்மையாக பராமரிக்க வேண்டுமெனவும், கொசு ஒழிப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டார். தொடர்ந்து மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர்  மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகளை சரிவர மேற்கொள்ளாதா பத்மவாதி அவுட்சோசிங் ஏஜென்சிக்கு அபராதம் விதிக்க மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.பின்னர் கலெக்டர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

திருநெல்வேலி மாவட்டத்தில் தூய்மை மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள்,  துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் தமிழக அரசின் உத்தரவின்படி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இன்று திருநெல்வேலி அரசு கல்லூரி மருத்தவமனையில் மாநகராட்சி, சுகாதாரத்துறை மற்றும் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் 100 க்கு மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் மெகா தூய்மை மற்றும் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டள்ளனர். மருத்துவமனையில் நோயளிகளுக்கு கொசுகளில் மூலம் பல்வேறு நோய்கள் பரவாமல் இருக்க தொடர்ந்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று நாள் முழுவதும் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். என தெரிவித்தார்.இப்பணிகளில் திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறை சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின் போது மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ரவிசந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.செந்தில்குமார், மாநகர நல அலுவலர்  மரு.பொற்செல்வன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பாஸ்கர், மருத்துவமனை உள்தங்கு மருத்துவ அலுவலர் மரு.நீலா தாஷ்னி, வட்டாட்சியர் தங்கராஜ், துப்புரவு பணி ஆய்வாளர் செல்லத்துரை, துப்புரவு பணி மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து