பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் சர்க்கரை ஆலை அரவை மாவட்ட வருவாய் அலுவலர் தி.ரா.ரேவதி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2017      பெரம்பலூர்
perambalur 2017 12 14

 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் எறையூரில் உள்ள சர்க்கரை ஆலையின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரவைத் துவக்க விழா நேற்று (14.12.2017) நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலரும், தலைமை நிர்வாகியுமான தி.ரா.ரேவதி அரவை எந்திரத்திற்குள் கரும்பினை செலுத்தி நடப்பாண்டிற்கான அரவையை துவக்கி வைத்தார்.

கரும்பு அரவை

அதனைத் தொடர்ந்து எறையூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி தெரிவித்ததாவது:பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2017-2018 அரவைப் பருவத்திற்கு 6,956 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு அரவைப் பருவத்திற்கு 1,60,000 டன்கள் கரும்பு அரவைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1,40,000 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டம், கரும்பு சாகுபடியில் நுண்ணீர் பாசனம் அமைத்தல், அதிக சர்க்கரை கட்டுமானம் மற்றும் அதிக மகசூல் தரவல்ல ரகங்களை அபிவிருத்தி செய்து பயிரிடச் செய்தல் ஆகிய கரும்பு அபிவிருத்திப் பணிகள் தற்போது 2017-18ஆம் ஆண்டு நடவுப் பருவத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளர்கள் வாகன ஓட்டுநர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இந்த அரவைப் பருவம் சிறப்புடன் நடைபெற தங்களுடைய முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எறையூர் சர்க்கரை ஆலை கரும்பு அபிவிருத்தி அலுவலர் ஏ.ரவிச்சந்திரன், தலைமைக் கணக்கர் எஸ்.குப்பன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் பாரதிவளவன், தலைமை பொறியாளர் ராஜேந்திரன், துணை இராசயனர் எஸ்.மாதவன், நிர்வாக அலுவலர் ஜி.வேங்கடம், மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து