நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நோய் கண்டறிதல்

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      மருத்துவ பூமி

நீடித்த இருமல், சளி, மூச்சுவிட கடினம் மற்றும் நோய்க்கான ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்பட்ட வரலாறு போன்றவை நோய் கண்டறிதலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. செயற்கை மூச்சுப்பொறி சோதனை மூலம்  உறுதி செய்யப்படுகிறது. ஒருவர் எவ்வளவு காற்றை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் முடியும் என்பதையும் காற்று எவ்வளவு வேகமாக நுரையீரலுக்கு செல்லவும் வெளியேறவும் முடியும் என்பதையும் இது அளக்கிறது.

மெதுவாக அதிகரித்து வருவதால் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரிடமே இந்நோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது. செயற்கைக் காற்றளவியல் சோதனை வசதி இல்லாவிட்டால் மருத்துவ அறிகுறிகளான அசாதாரண மூச்சடைப்பு மற்றும் வலிந்து மூச்சை வெளியேற்ற எடுக்கும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு நோயைக் கண்டறியலாம். காற்றோட்டத் தடை ஏற்படுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நீடித்த இருமலும், சளியும் இருந்து வரும். ஆனால் இருமலும் சளியும் உள்ள எல்லோ ருக்குமே உருவாக வேண்டிய அவசியமில்லை.

நோய் மேலாண்மை

சிறந்த முறையில் நோய்க்கு மருத்துவம் அளிக்கும் திட்டத்தில் நான்கு கூறுகள் உள்ளன. நோயை மதிப்பீட்டு கண்காணித்தல், ஆபத்துக்காரணிகளைக் குறைத்தல், நிலையான மேலாண்மை, நோய் அதிகரிக்காமல் கவனித்தல்.

கூறு 1: நோயை மதிப்பிட்டுக் கண்காணித்தல்

மூச்சுத் திணறல் நீடித்த இருமல், சளி மற்றும் ஆபத்துக்காரணிகளுக்கு ஆட்பட்டவர்களுக்கு மருத்துவ அடிப்படையில்  நோய் கண்டறிதல் சோதனை நடத்த வேண்டும். இது செயற்கை மூச்சளவியல் முறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

கூறு 2: ஆபத்துக்காரணிகளைக் குறைத்தல்

புகையிலைப் புகை பணிச் சூழல் உள்வெளி காற்று மாசு மற்றும் உறுத்தல் பொருட்கள் ஆகியவையே நோய்க்கான ஆபத்துக்காரணிகள். இத்தகைய ஆபத்துக்காரணிகளுக்கு ஆட்படாமல் இருப்பதே இந்நோய் உருவாகி அதிகரிப்ப தைத் தடுக்கும் முக்கிய இலக்காகும்.

(அ) புகையிலைப் புகை:

புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட எல்லா நோயாளிகளையும் அதை விட்டொழிக்குமாறு சுகாதாரப் பணியாளர்கள் ஊக்குவிக்க வேண்டும். (ஊழுPனு) அறிகுறி இன்றி வேறு காரணங்களுக்காக வருவோரிடமும் சுகாதாரப் பணியாளர்கள் புகை பழக்கத்தை விடுமாறு தூண்டவேண்டும். சுயமாக மேற்கொள்ளும் முயற்சி களைவிட சுகாதாரப் பணியாளர்களின் ஆலோசனையால் புகைப்பழக்கத்தை விட்டொழிக்கும் விகிதம் அதிகரிக்கிறது. ஆலோசனை போதுமானதாக இல்லாமல் இருந்தால் மருந்தியல் சிகிச்சையையும் பரிந்துரைக்கலாம். புகையிலையின் தீங்கிழைக்கும் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பெரிய அளவில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. புகையிலையைப் பயன்பாட்டை விட்டொழிக்க விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வண்ணம் அலைபேசித் தொழிற்நுட்பத்தின் மூலம் இடைநிறுத்தத் திட்டம் வாழ்க்கை முழுவதும் புகையிலையை விட்டொழிக்கவும் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

(இ) உள்வெளிக் காற்று மாசு

குறிப்பாகப் பெண்களும் குழந்தைகளும் உயிர் எரிபொருள் புகைக்கு  உள்ளாவதைக் குறைப்பது என்பது உலக அளவில் நோயைக் குறைக் கும் முயற்சியில் ஒரு முக்கியமான இலக்காகும். வாகனம் மற்றும் தொழிச்சாலைப் புகையைப் பாதுகாப்பான அளவுக்குக் குறைக்கும் பொதுக்கொள்கை (ஊழுPனு) வளர்ச்சியைக் குறைப்பதற்கான உடனடி முன்னுரிமையாகும்.

கூறு 3 : நிலையான  மேலாண்மை

தனி நபர்கள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலேயே நோயைக் கட்டுக்குள் வைக்கும் ஒட்டுமொத்தமான அணுகுமுறை அடங்கி உள்ளது. சுகாதாரக் கல்வி மருந்து நுரையீரல் புனரமைப்பு உயிர்வளி சிகிச்சை செயற்கை சுவாசம் அறுவை மருத்துவம் ஆகியவை இந்த அணுகுமுறையில் அடங்கி உள்ளது.

சுகாதாரக் கல்வி

நோயாளிகளுக்குத் திறன்களையும் நோயோடு வாழும் ஆற்றலையும் ஆரோக்கிய நிலையையும் மேம்படுத்துவதில் சுகாதாரக் கல்வி ஒரு பங்கை வகிக்க முடியும். புகைத்தலை நிறுத்துவது உட்பட சில இலக்குகளை அடைவதில் அது பலனளிக்கும் நோய் அதிகரித்தலின் போது நோயாளியின் எதிர்வினையைக் கல்வி மேம்படுத்தும்.

மருந்தியல் சிகிச்சை

அறிகுறிகளைத் தடுத்துக் கட்டுப்படுத்தவும் அடிக்கடி நோய் அதிகரிப்பதையும் அதன் கடுமையையும் குறைக்கவும் ஆரோக்கிய நிலையையும் உடற்பயிற்சிகளைத் தாங்கும் திறனையும் மேம்படுத்தவும் மருந்தியல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

(அ) காற்றுப்பாதை விரிவாக்கிகள்

காற்றுப்பாதையை விரிவாக்கும் மருந்துகள்  அறிகுறிகளைக் கட்டுப் படுத்த தேவைப்படும்போதோ அல்லது தொடர்ந்தோ இம்மருந்துகள் அளிக்கப்படுகின்றன
.
(ஆ) குளுக்கோகோர்ட்டி கோஸ்டிராய்டுகள்

நிலையான  மேலாண்மையில் குளுக்கோ கோர்ட்டிகோ ஸ்டிராய்டு களின் பங்கு குறிப்பிட்ட அறிகுறிகளுக்கே உரியது ஆகும்.

(இ) பிற மருந்தியல் சிகிச்சைகள் தடுப்பு மருந்து

இறந்த அல்லது உயிருடனான செயலிழப்புச் செய்யப்பட்ட வைரசுகள் கொண்ட இன்ஃபுளுயன்சா தடுப்பு மருந்து நேர்வுகளுக்கு பரிந்துரைக்கப் படுகின்றன. 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய  நோயாளிகளுக்கு நியூமோகாக்கல் பாலிசாக்கரைட் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

நோய் அதிகரிக்காமல் கவனித்தல்

மருத்துவம் தேவைப்படும் மூச்சு மண்டல அறிகுறிகள்  சிகிச்சையில் ஒரு முக்கிய கட்டமாகும். மூச்சுக்குழல் மண்டலத் தொற்றும் காற்று மாசுமே நோய் அதிகரிப்புக்கான பொதுக்காரணம் எனினும் மூன்றில் ஒரு பங்கு நோய் அதிகரிப்புக் காரணங்கள் இனம் காண முடியாதவைகள். உள்ளிழுக்கும் காற்றுக்குழல் தளர்த்திகள் (குறிப்பாக பி இயக்கிகள் அல்லது எதிர்கோலிநெர்ஜிக்சுகள்), தியோஃபைலின் மற்றும் மண்டலம் சார் வாய்வழி, குளுக்கோ கோர்ட்டிக் கோஸ்டிராய்டுகள் கடும் நோயை அதிகரிப்பை கட்டுப்படுத்த சிறந்தவையாகும். காற்றுப்பாதைத் தொற்றின்  அதிகச் சளி நிற மாற்றத்துடன் அல்லது காய்ச்சல்) மருத்துவ அறிகுறிகளுடன் அதிகரிப்பு இருந்தால் நுண்ணுயிர்க் கொல்லி சிகிச்சை அளித்தால் பலன் கிடைக்கும். கடுமையான நோய் அதிகரிப்பின் போது ஊடுருவலற்ற நேர்மறை அழுத்த சுவாசம் இரத்த வாய்வையும்  Pர்- ஐயும் (அமில மற்றும் காரத் தன்மை அளவீடு மேம்படுத்துகிறது. மருத்துவமனை மரணத்தைக் குறைக்கிறது. ஊடுருவல் இயந்திர சுவாசம் மற்றும் குழல்செருகல் தேவைகளைக் குறைக்கிறது. மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குறைக்கிறது.

கடும் விளைவுகள்

நோயாளியின் பொதுவான மூச்சுத்திணறல், இருமல் மற்றும் அல்லது சளிஉற்பத்தி ஆகியவற்றில் அன்றாடக இயல்புநிலை வேறுபாடுகளில் மாற்றம் ஏற்படும் இயல்பான நோய்ப்போக்கில் ஒரு நிகழ்வே (ஊழுPனு) யின் கடும் விளைவு என வரையறுக்கப்படுகிறது.

இது கடுமையாக ஏற்படும் நோயாளிக்கு தொடர்ந்து கொடுத்து வரும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்படலாம். மூச்சுக்குழல் மண்டலத்தின் தொற்றும் காற்று மாசுமே நோய் அதிகரிப்புக் கான பொதுக்காரணம் எனினும் மூன்றில் ஒரு பங்கு கடும் விளைவுகளுக்கான காரணத்தை இனங்காண முடிவதில்லை. இதய நோய்கள் நுரையீரல் புற்று மற்றும் முற்றியநிலை (ஊழுPனு) –யில் சுவாசச் செயலிழப்பு ஆகியவையே இந்நோய்வாய்ப்பட்டோர் இறப்பதற்கான காரணங்களாகும்.

எவ்வாறு தடுப்பது

தனி நபர்கள் பொதுவான ஆபத்துக்கரணிகளின் பாதிப்புக்கு (புகையிலைப் புகை பணிச்சூழல் காரணிகள், உள்வெளி காற்றுமாசு மற்றும் உறுத்தல் பொருட்கள்) உள்ளாவதைக் குறைப்பதும் தவிர்த்தலுமே இந்நோயின் முதன்மைத் தடுப்பு முறை இதைக் கருவுற்ற காலத்திலும் குழந்தைப் பருவத்திலும் தொடங்க வேண்டும். நேரடியாகவோ மறைமுகமாகவோ புகையிலைப் புகை பாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

எடை குறைந்த பிறப்பு ஊட்டச்சத்துக் குறைவு, ஆரம்பக் குழந்தைப் பருவத்தில் சுவாசத் தொற்று உள்வெளி காற்று மாசு பணிச்சூழல் பாதிப்பு ஆகிய பிற இணைந்த ஆபத்துக் காரணிகளில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான ஊட்டச்சத்துப் பழக்க வழக்கங்கள் தொடர் உடற்பயிற்சி புகையிலை காற்றுப்பாதை உறுத்திகள் ஒவ்வமைப்பொருட்கள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பற்றி மக்களுக்கும் நோய் ஆபத்தில் இருக்கும் தனி நபருக்கும் அறிவுறுத்த வேண்டும். சூழல் மாசடைந்து இருக்கும் போது கடுமையான உடல்பயிற்சிகளை அதிக நோய் ஆபத்தில் உள்ளவர்கள் வெளிப்புறத்தில் மேற்கொள்ளக் கூடாது.

மேலும் விவரங்களுக்கு : மருத்துவர் சி.சித்துராஜ், பொது நோய் மருத்துவர் தரண் மருத்துவமனை, சேலம். காலை 10.00 மணி முதல் 1.30 மணி வரை.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து