முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் தீ விபத்து; 16 தொழிலாளர்கள் பலி

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      இந்தியா
Fireworks 2024-06-29

Source: provided

டாக்கா : வங்காளதேசத்தில் ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

வங்காளதேச தலைநகர் டாக்காவில் ரூப்நகர் பகுதியில் வங்காளதேச வர்த்தக பல்கலைக்கழகத்துக்கு எதிரே ஒரு ரசாயன கிடங்கும், அதன் அருகே 4 மாடிகள் கொண்ட ஜவுளி ஆலையும் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில், நேற்றுமுன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில், ரசாயன கிடங்கில் ரசாயன பொருட்கள் வெடித்தன. அதனால் தீவிபத்து ஏற்பட்டது.அருகில் உள்ள ஜவுளி ஆலைக்கும் தீ பரவியது. 4 மாடிகளிலும் தீப்பிடித்துக்கொண்டது. தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தன.

அதன்பிறகு ஜவுளி ஆலையில் சோதனை நடத்தியபோது, 16 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் ஜவுளி ஆலை தொழிலாளர்கள் ஆவர். ஆனால் அவர்கள் அடையாளம் காணப்படவில்லை. ரசாயன கிடங்கில் இருந்து உருவான விஷ வாயுவை சுவாசித்ததால் அவர்கள் உயிரிழந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி முகமது தஜுல் இஸ்லாம் சவுத்ரி தெரிவித்தார். ரசாயன கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கான காரணம், விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்றும் அவர் கூறினார். மேலும் சில தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் டாக்கா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வங்காளதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து