எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லியில் தீபாவளிக்கு பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 முதல் 21 வரை டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் தளங்கள் மூலம் பட்டாசுகளை விற்கக் கூடாது” என தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அனுமதிக்கான காரணம் குறித்து விளக்கிய நீதிபதிகள், “ஏற்கெனவே அமலில் இருந்த முழுமையான தடை என்பது எதிர்மறை விளைவைக் கொண்டிருந்தது. காற்றின் தரத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வழக்கமான பட்டாசுகளை கடத்த வழி வகுத்தது. எனவே, நாங்கள் ஒரு சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டிய தேவை இருந்தது.” என தெரிவித்துள்ளனர்.
முந்தைய விசாரணையின்போது, டெல்லியில் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் ஒரு வருட காலத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


