தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஓய்வூதியர் உரிமை நாள் விழா: ராசிபுரத்தில் இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017      நாமக்கல்

தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஓய்வூதியர் உரிமை நாள் விழா, மாநில செயற்குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (17.12.2017)-ந்தேதி காலை 9.00 மணியளவில் இராசிபுரம் அரிமா சங்கம் சுமங்கலி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

தமிழக ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவரும் மாநில துணைத் தலைவருமான வெ.இராமசாமி தலைமையில் நடைபெறுகிறது. மாநிலத் தலைவர் கடலூர் ஓய்வூதியர் ஒளி விளக்கு மா.கண்ணன் கொடியேற்றி சங்க செயல்பாடுகளை விளக்கி இயக்க பேரூரையாற்றயுள்ளார். மாவட்ட துணைத்தலைவர் புலவர் இரா.வரதராசன் வரவேற்புரையாற்றயுள்ளார்.

படத்திறப்பு

 

நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றயுள்ளார். நாமக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஓய்வூதியர் தந்தை அமரர் டி.எஸ்.நகரா படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றயுள்ளார். கேப்டன் டாக்டர் எஸ்.சதாசிவம் சேவை மாமணி அமரர் கா.ஆஆந்த நடராசன் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றயுள்ளார்.

இவ்விழாவில் எஸ்.ஆர்.வி. பள்ளி செயலாளர் பி.சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் அ.பழனிமுத்து, மாவட்ட அமைப்பு செயலாளர் எம்.முத்துசாமி, மாநில துணைச் செயலாளர்கள் ஆ.முத்துசாமி, எஸ்.அய்யாவு, நினைவு பரிசு வழங்குபவர் வெ.இராமசாமி மற்றும் மாவட்ட, வட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் விழாக் குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மாநில செயற்குழு கூட்டம்

இதனை தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கொண்டுவரும் தீர்மானங்களை பரிசீலித்து நிறைவேற்றப்படுகிறது. ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க அழைக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து