எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இயற்கை ஆர்வலரின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலர் ஒருவரின் புதுமையான முயற்சியால் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிகு திண்பண்டங்களை வீட்டிற்கே தேடி வந்து விநியோகித்திடும் புதுமையான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்து வருகிறது.
பொதுவாக சிறுதானியங்கள் என்பது வரகு,சாமை,தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளை குறித்திடும்.பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இன்றைய காலகட்டத்தில் குறைவான மழைபொழிவு,குன்றிய மழைவளம்,தேவைக்கதிகமான உரப்பயன்பாடும் அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடுகளும்,வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம் போன்ற காரணிகள் சிறுதானியங்களே வருங்கால உணவாகும் என்ற கருத்தினை வலுப்பெற வைக்கிறது.கடந்த காலங்களில் அரிசியை பயன்படுத்திட வசதியில்லாத ஏழை எளிய மக்களின் உணவாக திகழ்ந்த சிறுதானியங்கள் இன்று பன்மடங்கு வசதி படைத்த செல்வந்தர்களின் அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.நம்முடைய முன்னோர்கள் போல் 80முதல்100வயது வரையில் ஆரோக்கியமாக வியாதிகள் இல்லாமல் வாழந்திட சிறுதானியங்களான வரகு,குதிரைவாலி,சாமை,தினை,காடைக்கன்னி,கம்பு, சோளம்,கேழ்வரகு ஆகியவற்றை சமைத்து அன்றாட உணவாக பயன்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலரும் அருந்தானிய உணவுக்கலை நிபுணரும், முதுநிலை பட்டதாரியுமான க.காளிமுத்து என்பவர் தற்போது அன்னவயல் என்ற பெயரில் சிறுதானிய சிறப்பு திண்பண்டங்களை பாரம்பரிய முறையில் சுவைபட தயாரித்து அவற்றினை பக்குவமாக பேக்கிங் செய்து அலைபேசியில் அழைத்;து ஆர்டர் தருவேரின் இல்லங்களைத் தேடிச் சென்று விநியோகித்து வருகின்றார்.திருமங்கலம் நகர் ராஜாஜி 7வது தெருவில் உள்ள அலுவலகத்தில் அருந்தானிய உணவுக்கலை நிபுணர் காளிமுத்து,அவரது உதவியாளர்களுடன் இணைந்து தினம்தோறும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன்படி நாள்தோறும் வரகில் தயாரிக்கப்படும் அச்சுமுறுக்கு,தினையால் தயாரிக்கப்படும் சீரணி,அதிரசம்,லட்டு குதிரைவாலியால் தயாரிக்கப்படும் காராச்சேவு,சீவல்,மிக்சர் போன்ற பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் செக்கில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணையை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.தற்போது பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 3காரவகைகள்,3சுவீட் வகைகள்,3தின்பண்ட வகைகள் பேமிலிகிட் ஆக ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேயற்கையான ரசாயன உரங்கள் தவிர்த்து முற்றிலும் இயற்கையான முறையில் அன்னவயலில் விளைவிக்கப்படும் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்களை வீட்டில் இருந்தபடி பெற்றிட ஒருநாள் முன்னதாக 99435-95340என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய தின்பண்டங்கள் மறுநாள் உரிய நேரத்தில் வீடுதேடி வந்து விடுகிறது.அதே போல் அன்னவயலில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்படும் 6வகையான காய்கறிகள் ரூ.100க்கு வீடு தேடிவந்து விற்பனை செய்யப்படுகிறது.மேலும் முற்றிலும் புதுமையான முறையில் தினம் தோறும் மாலை நேரங்களில் இங்கு தயாரிக்கப்படும் வெற்றிலை பஜ்ஜி,வாழைப்பூ வடை,பசலைகீரை பஜ்ஜி இவற்றுடன் முடக்காத்தான்,முசுமுசுக்கை, வாழைத்தண்;டு, கருவேப்பிலை மற்;றும் முருங்கை சூப் வகைகள் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவைகளாகும்.
இயற்கை ஆர்வலர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு திருமங்கலம் நகர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்டு வாசலுக்கு தேடிவரும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் மிகுந்த ருசியுடன் கிடைப்பதால் தினம் தோறும் ஏராளமானோர் தங்களுக்காகவும் தங்களது குழந்தைகளுக்காகவும் பாரம்பரிய சிறுதானிய தின்பண்ட வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்கின்றனர்.இயற்கை ஆர்வலர் காளிமுத்து மேற்கொண்டுள்ள இந்த புதுமையான முயற்சியின் காரணமாக தற்போது திருமங்கலம் நகர மக்கள் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை வாங்கி உண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
கராச்சி: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி
12 Feb 2026கராச்சி, கராச்சியின் வெவ்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு நடந்த நான்கு தனித்தனி துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு பேர் பலியாகினர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு
12 Feb 2026நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
ராகுலுடன் பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு
12 Feb 2026டெல்லி, டெல்லியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேற்று சந்தித்துப் பேசினார்.
-
தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ராகுலை பதவி நீக்கக்கோரி தனிநபர் தீர்மானம் தாக்கல்
12 Feb 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தனிநபர் தீர்மான நோட்டீஸை பா.ஜ.க. எம்.பி.
-
அகமதாபாத் விமான விபத்து: இத்தாலி நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையால் பரபரப்பு
12 Feb 2026ரோம், அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தி அறிக
-
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப்
12 Feb 2026நியூயார்க், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமரை சந்தித்த பின் அதிபர் ட்ரம்ப் எச்சரி
-
வங்கக்கடல் பகுதியில் பிப்.15-ல் உருவாகிறது புதிய புயல் சின்னம்
12 Feb 2026சென்னை, வங்கக்கடல் பகுதியில் வருகிற 15-ந் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
டெல்லியில் புதிய பிரதமர் அலுவலம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026டெல்லி, தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்தின் புதிய கட்டிடமான சேவா தீர்த் மற்றும் கர்த்தவ்ய பவன் 1 மற்றும் 2ஐ பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13-ம் தேதி (இன்று) த


