முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்கல் ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் சிறப்பு கிராமசபா கூட்டம் : கலெக்டர் சீ.சுரேஷ்குமார் பங்கேற்பு

புதன்கிழமை, 20 டிசம்பர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் "கிராம தூய்மை தின"த்தை முன்னிட்டு சிக்கல் ஊராட்சியில் சிறப்பு கிராமசபா கூட்டம் நேற்று (20.12.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், பார்வையாளராகப் பங்கேற்று ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கிராமசபா கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

கழிப்பறை திட்டம்

இந்த கிராமசபா கூட்டத்தில் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊரகப்பகுதிகளில் கொசுக்கள் வாயிலாக உருவாகும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துதல் குறித்தும், அந்தியோதயா திட்டத்தின்கீழ் 02.10.2019-ற்குள் வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்றுவது குறித்தும் விவாதித்து ஒப்புதல் பெறப்பட்டது. கிராமசபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தெரிவித்ததாவது, " தமிழ்நாடு அரசு மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக எந்த கிராமத்தில் சுகாதாரக் குறைபாடு அதிகமாக உள்ளதோ, அங்கு நோய் பாதிப்பு உண்டாகும்.

ஆகவே நாம் நம் சுற்றுப்புறத்தினை தூய்மையாகப் பேணிக் காக்க வேண்டும். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 29 ஊராட்சிகளில் இதுவரை 12 திறந்தவெளியியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி என்ற நிலை அடைந்துள்ளது. இன்றைய சிறப்பு கிராமசபையில் 4 ஊராட்சிகள் திறந்தவெளியியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி என்ற நிலையை அடைந்த ஊராட்சிகளாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10.01.2018 க்குள் திறந்தவெளியியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி என்ற நிலையினை அடைந்து கிராமசபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் 28.02.2018 க்குள் திறந்தவெளியியில் மலம் கழித்தலற்ற ஊராட்சி என்ற நிலையை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிட வசதி சிக்கல் ஊராட்சியில் உள்ள 1802 வீடுகளில் 1566 வீடுகளில் கழிப்பறைகள் உள்ளன.

மீதமுள்ள வீடுகளில் கழிப்பறை கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கழிவறை கட்ட இடவசதி இல்லாதவர்கள் பொதுக் கழிப்பிடமாக மகளிர் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம், ஆண்கள் சுகாதார வளாகத்தைப் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. வரும் பிப்ரவரி 2018 முதல் நாகப்பட்டினம் மாவட்டம் திறந்தவெளி மலம் கழத்தலற்ற மாவட்டமாக திகழ பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.;" என தெரிவித்தார். இக்கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர்விழி, கஸ்தூரி, வட்டாட்சியர் இராகவன், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து