முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் கோவிலில் இடிந்து விழுந்த கிரிபிரகாரம் முழுவதும் பொக்லைன் மூலம் அகற்றும் பணி துவங்கியது

வெள்ளிக்கிழமை, 22 டிசம்பர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இடிந்து விழுந்து சேதமடைந்த கிரி பிரகார மண்டபத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நேற்று துவங்கியது. மேலும் கிரி பிரகாரத்தையட்டியுள்ள கடைகளையும் அப்புறப்படுத்தும் பணியும் நடந்தது.

இடிந்து விழுந்தது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14ம் தேதி கிரி பிரகாரம் மண்டபம் இடிந்து விழுந்தது. இதில் பேச்சியம்மாள் என்ற மோர் விற்ற பெண் இறந்தார். சுப்பிரமணியபுரம் செந்தில்ஆறுமுகம், திருப்பூர் கந்தசாமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் சேதமடைந்த ஆய்வ மண்டபத்தை அகற்றிவிட்டு புதிய மண்டபம் கட்டப்படும் என அமைச்சர் அறிவித்தார். மேலும் சேதமடைந்த மண்டபத்தை ஆய்வு செய்ய தூத்துக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தலைமையில் ஐவர் குழு அமைத்து கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அறநிலையத்துறை சார்பில் கிரி பிரகார மண்டபத்தை அறநிலையத்துறை மதுரை மண்டல செயற்பொறியாளர் வெண்ணிலா தலைமையில் இன்ஜினியர்கள் ஆய்வு செய்தனர். இவர்கள் அனைவரும் சேதமடைந்த கிரி மண்டபத்தை அப்புறப்படுத்த ஆய்வறிக்கை சமர்பிக்கபித்தனர். இதனைதொடர்ந்து கோயில் பிரகார மண்டபத்தையட்டியுள்ள உள்ள கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் விட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக கோயில் வளாக கடை வியாபாரிகள் மதுரை ஐகோர்ட் கிளையில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் சேதமடைந்த கிரி பிரகார மண்டபத்தை இடிக்கும் பணி நேற்று(22ம் தேத)அதிகாலை துவங்கியது. இதற்காக இரு நாட்களுகளுக்கு முன்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் இணை ஆணையர் பாரதிதலைமையில் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., கணேஷ்குமார், தாசில்தார் அழகர், போலீஸ் டி.எஸ்.பி. பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஷீஜாராணி, ரகுராஜன் நேரடி பார்வையில் அறநிலையத்துறை மதுரை மண்டல செயற்பொறியாளர் வெண்ணிலா உதவி செயற்பொறியாளர்கள் கந்தவேலு, குமரன், முருகானந்தம், நெல்லை மண்டல உதவி இன்ஜினியர்கள் நெல்லைகுமார், திருநாகலிங்கம், கோயில் இளநிலை பொறியாளர் சந்தாண கிருஷ்ணன், கோயில் உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக சூப்பிரெண்ட் யக்ஞ நாராயணன், தீயணைப்பு நிலைய மீட்பு அலுவலர் முத்துகுமார் மேற்பார்வையில் இடிக்கும் பணி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது. இதற்காக பெங்களூரிலிருந் வரவழைக்கப்பட்ட பொக்லைன் இயந்திரம் இடிக்கும் பணியில் ஈடுப்பட்டது. வடக்கு கிரி பிரகார நுழைவு வாயில் பகுதியில் இடிக்கும் பணி துவங்கியது. இதற்காக முன் எச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருள் சூழ்ந்த பகுதியிலிருந்து இடிக்கும் பணி நடந்ததகோயில் வளாகத்தில் மணடபம் இடிக்கும் பணியை தொடர்ந்து கோயில் கலையரங்கம் பகுதியில் தடுப்பு வேலிகள் ஏற்படுத்தப்பட்ட பக்தர்கள் யாரும் அப்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. கோயில் கிரி பிரகார மண்டபம் 1971ம் கட்டுப்பணி துவங்கி 1974ல் முடிவடைந்தது. அப்போது ரூ.5 லட்சம் மதிப்பிட்டில் சாண்டோ சின்னப்பதேவரால் கட்டி கொடுக்கப்பட்டது. இதனால் இம்மண்டபத்திற்கு சாண்டோ சின்னப்பதேவர் மண்டபம் என அழைக்கப்பட்டது. இம்மண்டபம் 545 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்டது. மொத்தம் 34 பெரிய தூண்கள் உட்பட 196 தூண்களை கொண்டு வடிவமைக்கப்பட்டது. மண்டபத்தின் உயரம் 5.60 மீட்டர் ஆகும். இதனை வெளியூர் உபயதாரர் சொந்த செலவில் அப்புறப்படுத்தி கொடுக்கிறார்.இதுகுறித்து கோயில் இணை ஆணையர் பாரதி கூறியதாவது:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபம் தமிழக அறநியைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி இடிக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணி இன்னும் 4 அல்லது 5 நாட்களில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம். இப்பணியில் அறநிலையத்துறை, வருவாய்துறை, தீயணைப்பு மீட்பு பணித்துறை, போலீசார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து