கிறிஸ்மஸ் பண்டிகை சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள்

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      திருநெல்வேலி

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள தேவலாயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் உள்ள பரி பவுல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிகாலை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதே போல் சங்கரன்கோவில் டிடீடிஏ வளாகத்தில் உள்ள தூய பவுல் சிற்றாலயத்தில் காலை ஆராதனைகளும் அதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் தூயவளனார் ஆலயத்தில் வைத்து நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி ஆராதனை நிகழ்விற்கு ஜேம்ஸ்அடிகள் தலைமை வகித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதே போல் சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் உள்ள ஏராளமான சபைகளிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

பனவடலிசத்திரம் பகுதியில் கிறிஸ்மஸ் பண்டிகை விழா நடைபெற்றது. பனவடலிசத்திரம் பகுதிகளான தேவர்குளம் வன்னிக்கோனேந்தல்  மூவிருந்தாளி சாலைப்புதூர் சாயமலை மடத்துப்பட்டி பெருமாள்பட்டி தெற்குபுளியம்பட்டி கூவாச்சிபட்டி அடைக்கலாபுரம் தெற்குபனவடலிசத்திரம் வடக்குப்பனவடலிசத்திரம் ஆயாள்பட்டி குருக்கள்பட்டி மேலநீலிதல்லூர் தெற்குபுளியம்பட்டி வடக்கு அச்சம்பட்டி மூவிருந்தாளி மேலஇலந்தக்குளம் சுப்பையாபுரம்; குருக்கள்பட்டி கீழநீலிதநல்லூர் ஆகிய ஊர்களில் கிறிஸ்மஸ் பண்டிகை நடைபெற்றது.வடக்கு பனடவடலிசத்திரத்தில் நடைபெற்ற விழாவில் பாஸ்டர் ஜோதிமுத்து தலைமையிலும் டேவிட் முன்னிலையிலும் குழந்தைகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.    தேவர்குளத்தில் நடைபெற்ற விழாவில் தேவர்குளம் சேகர குரு ஏசாயா ராஜாசிங் தலைமை தாங்கினார். நள்ளிரவு ஜெபம் சிறப்பு பிராத்தனை ஆகியவை நடைபெற்றது. பனவடலிசத்திரத்தில் நடைபெற்ற விழாவில் அந்தோணிதங்கப்பாணடியன்  தலைமை தாங்கினார். ஆயாள்பட்டி அன்னை மேரி மாதா ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். கொக்குகுளத்தில் நடைபெற்ற விழாவில் ஜாய்சன் தலைமை தாங்கினார் காசிப்பாண்டியன் முன்னிலை வகித்தார். தெற்குபனவடலியில் நடைபெற்ற விழாவில் சீனிவாசகம் தலைமை தாங்கினார். கிறிஸ்துவ சபையை சேர்ந்த ஊழியர்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து