டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான கல்வித்திறன் மாநாடு

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      சென்னை
maanadu-

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் இந்திய வாகன பொறியாளர் சங்கத்தின் தென்மண்டல கிளை சார்பில் சனிக்கிழமை கல்வித்திறன் மாநாடு நடைபெற்றது.

கல்வித்திறன் மாநாடு

டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் துவக்க விழாவிற்கு டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். கல்வி குழும செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம்,கல்லூரி முதல்வர் பழனி, நிர்வாக அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். இயந்திர பொறியியல் துறை தலைவர் ஏ.ஜெயவீரன் வரவேற்றார்.இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஆவடி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன துணை இயக்குனர் எம்.காதர் பாஷா கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றுகையில்  போர் வாகன தயாரிப்பிலும், மேம்படுத்தும் பணியிலும் நவீன பொறியியல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் பொறியியல் மாணவர்கள் புதிய ஆராய்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.2030ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் இல்லாமல் இயங்கும் மின்னனு வாகனங்களை உருவாக்கும் சூழல் உள்ளதால் பொறியியல் மாணவர்கள் இதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும், ஆராயச்சிகள் குறித்து மாணவர்கள் கருத்தரங்குகள்,கல்வி மாநாடுகள், கல்லூரிகளில் சக மாணவர்களுடனும், பிற கல்லூரி மாணவர்களுடனும் விவாதிக்க வேண்டும் என கூறி மாநாட்டை துவக்கி வைத்தார்.இந்த மாநாட்டில் 18 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்பித்தல், புதிய கண்டுபிடிப்பு உத்திகள், அனிமேஷன் உள்ளிட்ட 35 கல்வித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டிகளில் வென்றவர்கள் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள அடுத்த கட்ட போட்டியில் பங்கேற்க உள்ளனர். முடிவில் இந்திய வாகன பொறியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர்  சிவகுமரன் நன்றி கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து