தமிழ்ச் சேவையை பாராட்டி தாரை.அ.குமரவேலுக்கு பாரதியார் விருது

திங்கட்கிழமை, 25 டிசம்பர் 2017      சேலம்
slm

 

சேலம் அமெச்சூர் ஆர்ட்ஸ் டிரஸ்ட்டின் 50-வது ஆண்டு பொன்விழா விருது வழங்கும் விழா, பாரதியார் பிறந்தநாள் கவியரங்கம் , மலேசியா குழுவினரின் ஐம்பெரும் காப்பியங்களின் மாபெரும் நாட்டிய விழா என முப்பெரும் விழா நடந்தது .

முப்பெரும் விழா

நிகழ்ச்சிக்கு அமெச்சூர் ஆர்ட்ஸ் டிரஸ்டின் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திரைப்பட இசையமைப்பாளர் தேவா, மேற்குமண்டல ஐஜி.பாரி, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், மாநகராட்சி கமிஷனர் சதிஷ், ஈரோடு மாவட்ட கூடுதல் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் உத்தமர் காந்தி விருது ப்ராங்ளின் ஆசாத் காந்திக்கும் , பாரதியார் விருது தாரை.அ.குமரவேலுக்கும், சேலம் ரத்னா விருது சாரதி செட்டியாருக்கும் , கலா ரத்னா விருது AVR சுகந்தி சுதர்சனம் , லட்சுமி காந்தன், வீர ரத்னா விருது பிரஜித் , தியாக செம்மல் விருது ரங்கராஜன் , அர்த்தனாரி , ராமமூர்த்தி, சந்திரஹாசன் , ஓபுளி , சேவை செம்மல் விருது அத்தியண்ணா , வகிதாபானு , சுந்தர் , உமாராணி செல்வராஜ் அருளப்பன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. முன்னதாக வையத் தலைமை கொள் என்ற தலைப்பில் கவியரங்கமும் , மலேசியாவைச் சேர்ந்த உலக தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஐம்பெரும் காப்பியங்களை விளக்கி 40-நடன குழுவினர் நாட்டியம் ஆடினர்.

நிகழ்ச்சியில் , நிர்வாகிகள் சுதர்சனம், சரவணன் , வெங்கட்ராமன், துரைசாமி, மாசிலாமணி , கண்ணன், முத்துவேல், ரவிமுருகன், ரவிகணேஷ், இளங்கோவன், திருமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . 500-க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து