ஆர்.கே.நகர் பகுதியில் ஆட்டோவில் கத்திகளுடன் இருந்த நபர் கைது

செவ்வாய்க்கிழமை, 26 டிசம்பர் 2017      சென்னை

சென்னையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகளை கைது செய்யவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யவும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

சிறையில் அடைப்பு

இதன் தொடர்ச்சியாக, -6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஆர்.கே.நகர், நின்றிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த நபர் போலீசாரை பார்த்ததும் ஓடினார். ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விரட்டிச் சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், அவர் அமர்ந்திருந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் 3 கத்திகள் இருந்தது தெரியவந்தது.அதன்பேரில், ஆட்டோவில் கத்திகளுடன் இருந்த நாகராஜ் () பயங்கர நாகராஜ், என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஆட்டோவில் வைத்திருந்த 1 அடி நீளமுள்ள கத்திகள்-3 மற்றும் மேற்படி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில் குற்றவாளி நாகராஜ் மீது ஏற்கனவே ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்குகள் உள்ளதும், நேற்றும் அது போல குற்றச்செயலில் ஈடுபடுவதற்காக ஆட்டோவில் தயாராக இருந்ததும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட குற்றவாளி நாகராஜ் () பயங்கர நாகராஜ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து