மாவட்ட நிர்வாகம் குறித்து ஆலோசனைகள் வழங்க, ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      தூத்துக்குடி
coffee with collector function

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகள், தன்னம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், பொது வாழ்வில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்ளல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்ற விதத்திலும், தங்களது திறமைகளை வளர்க்கின்ற விதத்திலும், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான கலந்துரையாடல் ‘காபி வித் கலெக்டர்’ என்ற புதுமையான நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், சிப்பிக் கூடத்தில் நடைபெற்றது.

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். மாணவ, மாணவியர்களிடம் சாலை விதிகளை கடைபிடிக்கவும், அவற்றை நண்பர்களுக்கும், அண்டை வீட்டாரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில், சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்,, உதவி ஆட்சியர் (பயிற்சி) எஸ்.சரவணன், துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி.ஏ.எஸ்.லாவண்யா, ஆகியோர் முன்னிலை வகித்து மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், அவர்களது சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:நாட்டின் வளர்ச்சியில் மாணவ, மாணவியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அவர்கள் வாழும் அல்லது வசிக்கும் பகுதிகளில் உள்ள அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் எவ்வாறு எதிர் கொள்வது என்பதற்காக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுவாக தங்களது பகுதிகளில் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தெரியும். அத்தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என்பதும் தெரியும், ஆனால் அவற்றை பெறுவதில் உள்ள சிரமங்கள், எந்தெந்த குறைகளுக்கு அது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை, எவ்வாறு சந்திப்பது அல்லது எவ்வாறு அது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது போன்ற சந்தேகங்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்வார்கள். மாணவ, மாணவியர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கபெறும் தகவல்களை தங்களது வீடுகளில் மட்டுமல்லாது, அண்டை அயலாரிடமும் தயக்கமின்றி தெரிவிப்பது, அவர்களிடம் பொது பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம், மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை செயல்படுத்த உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் எடுக்கப்படும்.

நமது மாவட்டத்தில் பருமழையின் போது கிடைக்கப்பெறும் நீர் சேகரிப்பதற்காக நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையினை தேர்ந்தெடுப்பதற்காக வழங்கப்பட்ட அறிவுரைகளை தெளிவாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்திய அளவில் நடைபெறும் போட்டி தேர்வுகளை மேற்கொள்ள மாணவ, மாணவியர்கள் தங்களது திறமைகளையும், அறிவாற்றலையும், வாசிக்கும் வழக்கத்தையும் அதிகரிப்பதோடு, தங்களிடம் உள்ள தாழ்வு மனப்பான்மைகளை அறவே நீக்கி, உங்களது தன்னம்பிக்கையை வளர்த்து வாழ்வில் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் அடிப்படை வசதிகள், சுற்றலா பயணியர் தங்கும் விடுதி ஆகியவற்றை மேம்படுத்திடவும், சுற்றலாதலங்களுக்கு வருபவர்களுக்கு வசதியாக ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்ய ஊநவெசந- களை ஏற்படுத்தவும் மேலும், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வி சுற்றுலா சென்றுவர ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என மில்லர்புரம், தி.விக்காசா பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மேலும் ஏ.பி.சி.வி. மகாலெட்சுமி பெண்கள் கல்லூரி மாணவிகள் ஆந்திர, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இயற்கை மேலாண்மை என்கின்ற இயற்கை சார்ந்த திட்டத்தின் மூலம், கால்நடை வளர்ப்பினை இயற்கை விவசாயத்தில் பயன்படுத்துவது குறித்து, நமது மாவட்டதில் உள்ள விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் எனவும், இயற்கை விவசாய முறையை நமது மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து சாமுவேல்புரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நமது மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றிடும் வகையில்  அதிக மரங்களை நட்டு வளர்க்கவும் அவற்றை இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி வளர்க்கவும் கேட்டுக்கொண்டனர். மேலும், முள்ளக்காடு, சாண்டி பொறியியல் கல்லூரி மாணவர்கள் மழைநீர் சேமிப்பு, இயற்கை விவசாயம் ஆகியவற்றை மேம்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், ஒருங்கிணைப்பாளர் வட்டாட்சியர் கே.ராஜ்குமார் தங்கசீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து