முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை கண்காட்சி: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தவும், தொடர் சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணகிரி ராயப்பா முதலி தெருவில் உள்ள சாந்தி திருமண மண்டபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 03.01.2018 முதல் 12.01.2018 வரை திட்டமிடப்பட்ட கண்காட்சியை கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சி

இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் மென்பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், ஊறுகாய், பாக்கு மட்டை தட்டுகள், பாசிமணி, புடவைகள், காட்டன் சுடிதார்ஸ், அலங்கார மலர் மாலைகள், நவநாகரீக அணிகலன்கள், தின்பண்டங்கள்; ஹேண்ட் பேக்குகள், கிப்ட் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது.

கண்காட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சியில் சேலம், ஈரோடு, வேலுர், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 40 -மகளிர் சுய உதவிகுழுக்கள் இக்கண்காட்சியில் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சந்திரா, உதவி திட்ட அலுவலர் பிரபாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் லோகரட்சகி, மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து