குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்: மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      திருவண்ணாமலை
photo04 a

 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.

ஆய்வு கூட்டம்

இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறை. நெடுஞ்சாலைத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம். பள்ளி கல்வித்துறை, தீயணைப்புத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சுகாதாரத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, ஆவின், கனிம வளத்துறை, ஊராட்சிகள் துறை உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், விழா பந்தல் அமைத்தல், இருக்கை வசதிகள் செய்தல், ஒலி, ஒளி ஏற்பாடுகள் செய்தல், கலை நிகழ்ச்சிகளில் பங்குபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குதல், குடிநீர் விநியோகம் செய்தல், தற்காலிக கழிவறைகள் அமைத்தல், குப்பை தொட்டி அமைத்தல், தீயணைப்பு கருவிகள் ஏற்பாடு செய்து தருதல், அவசர சிகிச்சை மையம் மற்றும் 108-வாகனங்கள் மைதானத்தில் தயார் நிலையில் வைத்தல், விழாவிற்கு தடையில்லா மின்சாரம் வழங்குதல், பயனாளிகள் பட்டியல் தயாரித்தல், பயனாளிகளை அழைத்து வருதல் மற்றும் பயனாளிகளை ஒழுங்குபடுத்துதல், சுதந்திரப் போரட்ட தியாகிகளை கௌரவித்தல் ஆகிய பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.இரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, உதவி காவல் கண்காணிப்பாளர் ரவாளிப்பிரியா மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து