முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரி மக்களுக்கு இலவச பொங்கல் பொருட்கள் இன்று ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அமைச்சர் கந்தசாமி தகவல்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      புதுச்சேரி

பொங்கலுக்கு இன்னும் ஒரு நாளே இடையில் இருக்கும்நிலையில் புதுவையில் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க கவர்னர் கிரன்பெடி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து உடனடியாக பொங்கல் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

இலவச பொருட்களாக ஒரு கிலோ அரிசி, அரை கிலோ வெல்லம், அரை கிலோ பாசிப்பருப்பு, 25 கிராம் முந்திரி, 10 கிராம் ஏலக்காய் ஆகிய 5 பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றை இன்றே வழங்க விரைவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது சம்மந்மமாக அமைச்சர் கந்தசாமி கூறியதாவது:-பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கு அனுமதி பெறுவதற்கு முன்பே 3 நிறுவனத்திடம் பேசி வைத்திருந்தோம். நேற்று முன்தினம் அனுமதி கிடைத்ததும் கொள்முதல் செய்வதற்கான பணிகள் தொடங்கின. உடனடியாக ஏலக்காய்,  முந்திரி பருப்பு சப்ளை செய்து விட்டனர். அடுத்து வெல்லம், அரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நாளை(இன்று) காலை முதல் பொங்கல் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். பொது மக்கள் தேவையான பைகள் கொண்டு  சென்று பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து