எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கலெக்டர் அலுவலக் சிறு கூட்ட அரங்கில் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தலைமையில் ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டம்
ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களுக்கு ரூ.20.00 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பான அரசாணை 12-01-2018 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசாணையினை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாகவும், இப்பணியினை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு அலுவலர்கள் குழு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கடலில் காணாமல்போன மீனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பு செய்திட கள ஆய்வு மேற்கொள்வது குறித்தும், காணமல் போன மீனவர்களின் விவரங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பது குறித்தும் கலெக்டர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர், கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:ஓகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 12-01-2018 அன்று அரசாணை வெளியிட்டது. அதன்படி, வட்டாட்சியர் தலைமையில், வட்டார அளவில் மீன்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மீனவகிராமத்தில் பிரதிநிதிகள் மூன்றுபேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு காணாமல் போன மீனவர்களின் விவரத்தை உறுதி செய்ய கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த குழு வழங்கும் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கபட்டுகாணாமல் போன மீனவர்களின் விவரம் உறுதி செய்யப்பட்டபின் உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும். இந்த குழு அமைப்பது குறித்தும். குழுவினரி;ன பணிகள் தொடர்பான முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 மீனவர்கள் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டு, அதில் இதுவரை 16 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.20 இலட்சம் வீதம் ரூ.3.20 கோடி நிவாரணத்தொகையும், காயமடைந்த 20 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.97,500 நிவாரணத்தொகையும், வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் விவரத்தை உறுதி செய்ய இந்த குழு அமைக்கப்பட்டு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இக்கூட்டத்தில மீன்வளத்துறை துணை இயக்குநர் வே.லாமேக் ஜெயகுமார். துணை காவல் கண்காணிப்பாளர் (கடலோர காவல்படை) ஸ்டான்லி ஜோன், வட்டாட்சியர்கள். மீன்வளத்துறை ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


