குற்றாலத்தில் தர்ப்பணம் கொடுக்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      திருநெல்வேலி
courtraalam falls

குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

தை அமாவாசை

இந்தியா முழுவதும் இன்று தை அமாவாசை முன்னிட்டு புனித ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். தை, ஆடி, புரட்டாசி ஆகிய மூன்று நாட்களில் அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு எள், தண்ணீர், மாவு போன்றவற்றை படைத்து தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.  அதன் படி தை அமாவாசையான இன்று தமிழகத்தில் புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம், பாபநாசம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அதிகாலை முதல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர். குற்றாலத்தில் குறைவாக தண்ணீர் விழுவதால் சற்று கூட்டம் குறைந்து காணப்பட்டது. இன்று முன்னோர்களுக்கு புனித ஸ்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசியும், ஆத்ம பலமும், நம் வாழ்வில் வளம் கிடைப்பதாக ஐதீகம் என்று தர்ப்பணம் கொடுத்தவர்கள் தெரிவித்தனர்.  தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர்; குற்றாலம் மெயின் அருவியில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து