Idhayam Matrimony

தொழுநோய் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் இல.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      விழுப்புரம்

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு,  கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில் பள்ளி மாணவியர்கள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

உறுதிமொழி

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் நாள் உலக தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.  அதன்படி, இன்றைய தினம் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு, கலெக்டர் இல.சுப்பிரமணியன்,  தலைமையில், பள்ளி மாணவியர்கள் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழிதொழுநோய், மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது என்பதனை நான் அறிவேன். உணர்ச்சியற்ற தேமல், படை போன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களையோ எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வேன்.  அவர்களை அன்பாகவும், எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன்.  தொழுநோய் முற்றிலும் குணமாகக் கூடியது.  ஆரம்ப நிலை சிகிச்சை உடல் ஊனத்தை தடுக்கும்.  தொழுநோயாளிகளை ஒதுக்கக்கூடாது போன்ற விபரங்களை அண்டை அயலாருக்குத் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன்.  தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.தொடர்ந்து, உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,      கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிகளில், துணை இயக்குநர்கள் டாக்டர்.தர்மலிங்கம் (மருத்துவப்பணிகள் (தொழுநோய்)), டாக்டர்.சுகந்தி (குடும்பநலம்), மாவட்ட கல்வி அலுவலர் நீலாம்பாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து