காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2018      சிவகங்கை
karikudi alagappa 4 2 18

காரைக்குடி. - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்த் துறையின் சார்பில் மானுடம் பாடிய வானம்பாடி திரு. ஆ. சந்திரபோஸ் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி தமிழ்த் துறை கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றிய அழகப்பாபல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் மானுடம் பாடியவானம் பாடிதிரு.ஆ.சந்திரபோஸ் அவர்கள் அனைத்து திறமைகளையும் ஒருங்கேபெற்ற கவிஞர்,எழுத்தாளர்,உரைநடையாளர்,சிறுகதை எழுத்தாளர், மற்றும் திறனாய்வாளர் எனக் குறிப்பிட்டார்.  மலையாளத்தில் எழுத்துத்துறையில் மிகவும் சிறந்துவிளங்கிய முகம்மதுப~pர் அவர்களோடு ஒப்பிடக் கூடிய வகையில் வானம்பாடி சந்திரபோஸ் சிறந்து விளங்கினார். தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்களை நாம் மதிக்க வேண்டும்.  தமிழில் சிறந்துவிளங்கிய பல்வேறு படைப்பாளிகளின் புகைப்படங்கள் தமிழ் துறையில் இடம்பெற்றுள்ளன.  படைப்பாளிகளின் படங்களை பார்த்துக் கொண்டேயிருக்கும் பொழுது நமக்கும் படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்ற ஒருஉந்துதல் ஏற்படும் என்றார். தமிழ் மொழியின் சிறப்புகளை மாணவர்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.  தான் அண்மையில் சீனாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டபொழுது அங்கு தான் பார்வையிட்ட கல்விநிறுவனத்தின் துணைவேந்தர் 25 ஆண்டுகளாக அப்பதவியில் இருக்கிறார்.  அந்த நிறுவனத்தில் 30000 மாணவர்களும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பணிபுரிகிறார்கள்.  ஆனால் அவர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. மாறிவரும் வளர்ச்சிக்கேற்ப அனைத்தையும் தங்களுடையதாய் மொழியிலேயே அவற்றை அறிந்து அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். வல்லரசு நாடாகசீனா திகழ்ந்த போதும் தாய் மொழிபற்று அவர்களிடம் மிகுந்து காணப்படுவதால் பழமையை மறக்காதவர்களாகவும் புதியதொழில் நுட்பத்தைகற்றுக் கொள்பவர்களாகவும், உழைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாகவும், தங்களது தாய்மொழியை பாதுகாக்கவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாகவும், தங்களது நாட்டை தூய்மையாகவைத்துக் கொள்ளவேண்டும் என்ற கோட்பாடு கொண்டவர்களாகவும் அந்நாட்டுமக்கள் திகழ்கிறார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றிய சென்னைசாகித்ய அகாதமி பொறுப்பு அலுவலர் முனைவர் ஏ.எஸ். இளங்கோவன் அவர்கள் தம் உரையில் மானுடம் பாடியவானம்பாடி திரு. ஆ.சந்திரபோஸ் சிறந்தயதார்த்தவாதி இவர் தம் படைப்புகளில் கரிசல் காட்டுபகுதிகளில் சமுதாய அவலங்களை படைத்துக்காட்டியவர்.  சிவகாசியில் உள்ள குழந்தை தொழிலாளர் பிரச்சினை, பெண்கள் பிரச்சினை, விளிம்பு நிலைமக்களின் வாழ்வியியல், வேளாண்மைநசிவு ஆகியவற்றை பொதுவுடைமைச் சிந்தனையுடன் வெளிப்படுத்தியவர் என்றுகுறிப்பிட்டார்.
தமிழ்த்துறைத் தலைவர் பேரா. மு.பாண்டி அனைவரையும் வரவேற்றார்.  உதவிப் பேராசிரியர் திரு.மு.நடேசன் நன்றி கூறினார். தமிழ்த்துறைபேராசிரியர்கள், ஆராய்ச்சிமாணவர்கள், முதுகலைதமிழ் மாணவர்கள், மற்றும் இராமசாமி தமிழ்க்கல்லூரி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து