மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      மதுரை
madurai  meenachi7 2 18

மதுரை  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று காலை தேசிய பாதுகாப்பு படையினர் (என்.எஸ்.ஜி . ) ஆய்வு பணி மேற்கொண்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப் 2ம் தேதி இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது . இதில் பழமையான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை தேசிய பாதுகாப்பு படை எஸ்.பி. தலைமையில் இன்ஸ்பெக்டர், 2 கமாண்டர்கள் கொண்ட குழு கோவிலில் சுற்றி பார்த்து ஆய்வு மேற்கொண்டனர். தேசிய பாதுகாப்பு படை அலுவலகங்கள் சென்னை, கோவை நகரங்களில் உள்ளன. நேற்று சென்னை அலுலகத்திலிருந்து வந்த குழுவினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர். கோபுரங்களில் ஏறியும் பார்வையிட்டனர். மேலும் இவர்கள் தீ விபத்து நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு , இதில் ஏதும் தீவிரவாதிகள் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து