முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில் அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி4 க்கான கேள்வித்தாள் இருப்பு : கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      கரூர்
Image Unavailable

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகிற 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படவுள்ள தொகுதி - 4 க்கான போட்டித் தேர்வுக்கு, கரூர் மாவட்டத்தில் தேர்வு எழுதவுள்ள 30725 பேருக்கு 96 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  

மேற்படி பணியில் 96 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 96 ஆய்வு அலுவலர்கள், 1540 அறை கண்காணிப்பாளர்கள், 19 மண்டல அலுவலர்கள் மற்றும் 15 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு தினத்தன்று சிறப்பு பேருந்துகள் வசதியும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.

 தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட சாதனங்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட சாதனங்களை வைத்திருப்பது தெரிய வந்தால், உடனடியாக அறை கண்காணிப்பாளர்களால் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வை மையம்

மேலும், தேர்வு எழுதுவோர் கருப்பு அல்லது நீல நிற பந்து முனை பேனாக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும், கரூர் மையத்தில் ஒரே பெயருடைய பள்ளிகள் 1. புனித தெரசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர் வடக்கு பிரதட்சணம் ரோட்டிலும், புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்தி கிராமத்திலும் உள்ளது. 2. சேரன் மெட்ரிகுலேசன் பள்ளி, இராமகிருஷ்ணபுரத்திலும், சேரன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, வெண்ணமலையிலும், சேரன் மேல்நிலைப்பள்ளி, புன்னம் சத்திரத்திலும் உள்ளது என்பதால் தேர்வாளர்கள் தங்களுக்கு உரிய சரியான தேர்வு மையத்தினை தேர்வுக்கூட அனுமதி சீட்டில் சரிபார்த்து, சரியான தேர்வு மையங்களுக்கு செல்வதன் மூலம் தேர்வு எழுதுபவர்கள் அலைச்சலின்றி உரிய நேரத்தில் தேர்வுக் கூடத்திற்கு செல்லலாம் என்றும், கரூர் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், , தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், மாவட்ட கருவூல அலுவலர் ஜெயபிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உட்பட பலர் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து