முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மைத்துறை சார்பில் புகையிலைக்கு மாற்றுப்பயிர் திட்ட பிரச்சாரம் சென்னை வேளாண் அதிகாரி ஆய்வு

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018      ஈரோடு
Image Unavailable

ஈரோடு மாவட்டத்தில் கோபி, நம்பியூர், சத்தி, பவானிசாகர் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் புகையிலை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

பாசனநீர் உள்ள பகுதியில்

குறுகிய காலத்தில், குறைவான தண்ணீரில் கணிசமான வருமானத்தை ஈட்டும் பயிராக புகையிலை இருப்பதால், குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உப்புத்தன்மை அதிகமாக உள்ள தண்ணீரிலும் புகையிலை சமாளித்து வரும் என்பதால், பிரச்சனைக்குரிய பாசனநீர் உள்ள பகுதியிலும் விவசாயிகளிடம் வரவேற்பைப்பெற்றுள்ளது.
ஆனால் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு தானிய உற்பத்தியைப் பெருக்க வேண்டிய நிலையில் வேளாண்மைத்துறை உள்ளதால், உணவு தானியப் பயிர்களின் சாகுபடியை அதிகரிக்க முனைப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக சுவாசக்கோளாறு, புற்றுநோய், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் காரணமாக உள்ள புகையிலைப் பயிர் சாகுபடிக்கு மாற்றாக தானியப்பயிரான மக்காச்சோளத்தை அதிக பரப்பில் கொண்டுவர வேளாண் துறை மூலம் மாற்றுப்பயிர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புகையிலை சாகுபடி செய்யும் பரப்பில் மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்கும் விதத்தில், விவசாயிகளுக்கு விதைகள், நுண்ணூட்டம், உயிர் உரங்கள், உள்ளிட்டவைகளுக்கு எக்டருக்கு ரூபாய் ஐந்தாயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

ஆய்வு

இத்திட்ட செயல்பாடுகளை கோபி, நம்பியூர், பவானிசாகர் உள்ளிட்ட வட்டாரங்களை சென்னை வேளாண்மை இயக்குநர் அலுவலக வேளாண்மை அலுவலர் (தானியங்கள்) பரிமேலழகர் ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தினார். முதலில் கோபி அருகே உள்ள அயலூர் கிராமத்தில் கண்ணுச்சாமி, ராமசாமி, நாராயனசாமி ஆகியோரது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த புகையிலை வயல்கள் மற்றும் மக்காசோள செயல்விளக்கத்திடல் வயல்களையும், சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்ட நிலக்கடலை வயல்களையும் பார்வையிட்டார்.  அதன் பின்பு நம்பியூர் வட்டாரம் கோசனம், கூடக்கரை கிராமங்களில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பயிற்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டு அவர் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து பவானிசாகர் உள்ளிட்ட வட்டாரங்களில் புகையிலைக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளையும், இத்திட்டத்தின் முன்னேற்றங்களையும்  ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநர்கள் அ.நே.ஆசைத்தம்பி, அசோக், வேளாண்மை அலுவலர்கள் புனிதா, ஜீவதயாளன், துணை வேளாண்மை அலுவலர் மாதவன், உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து