முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை இந்தியா திட்டம் ஒரு நாள் பயிற்சி

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2018      காஞ்சிபுரம்
Image Unavailable

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தல் நிலையினை ஒழித்தல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், பொது மக்களிடம் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ளுவதற்காக 47 பரப்புரையாளர்கள் பேரூராட்சிகளில் வார்டு வாரியாக நியமனம் செய்யப்பட்டு அக்டோபர் 2017 மாதம் முதல் பணி புரிந்து வருகின்றனர்.

 விழிப்புணர்வு

மேற்படி பரப்புரையாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் பெ.மனோகரன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் வரவேற்புரை அளிக்கப்பட்டு இணை இயக்குநர் பேரூராட்சிகள் இயக்ககம் சோ..மலையமான்திருமுடிக்காரி தலைமையில் ரிவார்டு சொசைட்டி, விழுப்புரம் என்ற நிறுவனத்தின் மூலம் பயிற்சி நடத்தப்பட்டது.

மேற்படி பயிற்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு.ஜா.சம்பத், கூடுதல் இயக்குநர், ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஜெயபாலன், செயலாளர், ரிவார்டு சொசைட்டி, விழுப்புரம் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் திறன்மேம்பாடு பயிற்சி சுப.இராசன்பாபு, தேசிய வல்லுநர்-நிதி, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், புதுடெல்லி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி - சு.நித்தியாநந்தம், மனித வள ஆலோசகர் மற்றும் பரப்புரையாளர்களுக்காக பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து - நிவேதிதா, முதன்மை பயிற்றுநர் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் உத்திரமேரூர் மற்றும் பெருங்களத்தூர் பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் தூய்மை இந்திய திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பாக குறும்படம் எம்.கேசவன், செயல் அலுவலர், உத்திரமேரூர் பேரூராட்சி தொகுத்து வழங்கப்பட்டது. மேற்படி பயிற்சியில் அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவில் குழு விவாதம் மற்றும் குழுவின் விளக்கவுரை மற்றும் மதிப்பீடுகள் அளிக்கப்பட்டு, சாந்தகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அவர்களால் நன்றிவுரை வழங்கப்பட்டு பயிற்சி இனிதே முடிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து