முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி அளவிற்கு புத்தகங்கள் விற்பனை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

திங்கட்கிழமை, 12 பெப்ரவரி 2018      திருநெல்வேலி

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற ‘நெல்லை புத்தகத் திருவிழா”  2018 -03.02.2018 முதல் தொடங்கி  04.02.2018 அன்று மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்கள்.  நிறைவு நாள் வரை சுமார் ரூ.2 கோடி அளவில் புத்தகம் விற்பனை ஆகியுள்ளது என நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி,,  தெரிவித்தார். கலெக்டர்  பேசியதாவது:-

புத்தகத் திருவிழா

 திருநெல்வேலி மாவட்டத்தில் 4 ஆண்டுக்கு பிறகு புத்தகத் திருவிழா நடைபெற்றுள்ளது. புத்தகத் திருவிழா- 2018 ல் அனைத்து தரப்பு மக்கள் ஒத்தழைப்புடன் புத்தகத் திருவிழா மிக வெற்றிகரமாக நடைபெற்றது. புத்தகத் திருவிழாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.  2 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் புத்தகத் திருவிழாவில வருகைபுரிந்துள்ளனர். இதில் 40 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்குபெற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களில் உள்ள நூலகத்திற்கு புதிய புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழா  முன்னிட்டு சுத்தம் புத்தகம் தரும் என்ற போட்டியில் 1300 பள்ளிகள் பங்குபெற்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வட்டங்களாக  பிரித்து வட்டாரத்திற்கு 5 பரிசுகள் என மொத்தம் 105 பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலும், நடுநிலை பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பிலும், மெட்ரிக் பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலும், மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பில் ஆக மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு மேலாக புத்தகங்கள் பரிசாக  வழங்கப்பட்டுள்ளது. மேலும் புத்தகத் திருவிழா தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இனி வருங்காலங்களில் ஆண்டு தோறும் புத்தகத் திருவிழா பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்படும். புத்தகத் திருவிழா- 2018 மிகப் பிரம்மாண்ட முறையில் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும்  கலெக்டர்  தெரிவித்தார்.பின்னர் நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் கலெக்டர் புத்தகத் திருவிழா நடைபெற ஆதரவு அளித்த  தனியார் நிறுவனங்கள், கலைஞர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்ற அனைத்து தரப்பு பிரதிநிதிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி,,  கௌரவித்தார்கள்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம்பகவத்,, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, உட்பட அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து