முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் உடனடியாக அமைக்க வேண்டும்பிற்படுத்தப்பட்டோர் பேரவை வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      புதுச்சேரி

தமிழக சட்டமன்றத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்தை திறந்தமைக்கு தமிழக முதல்வருக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை பாராட்டு தெரிவிக்கிறது.

ஜெயலலிதாவிற்கு மணிமண்டபம்

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச்செயலாளர் வீரவன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் 7 கோடி மக்கள் அனைவராலும், அது தவிர அனைத்து மாநில  மற்றும் உலக தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்தை, அவரது சேவைகளை போற்றும் விதமாக தமிழக சட்டமன்றத்தில் திறந்து வைத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். அவரது அரசியல் பணிகளில் பலவைகள் ஏழை, எளிய மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்தது அனைவராலும் அறிந்த ஒன்று. அது தவிர தேசத்தை கவரும் இரும்பு பெண்மணியாக அகில இந்திய அரசியலில் அவரது பங்களிப்பு இருந்ததை இந்த நாடே அறியும். சமூக நீதிக்காக பாடுபட்ட  வீராங்கனை, ஏழை, எளிய மக்களுக்கு சொல்லில் அடங்காத அளவிற்கு, அனைத்து சலுகைகளையும் பெற்று தந்தவர்.  ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அவரது திருவுருவப்படத்தை தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் நேற்று திறந்து வைத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை சில எதிர்க்கட்சிகள் வேண்டுமென்ற விமர்சனம் செய்கின்றனர். இதனை பிற்படுத்தப்பட்டோர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ெஜயலலிதாவிற்கு தமிழக அரசு உடனடியாக சென்னையில் மணிமண்டபம் கட்டவேண்டும், அது தவிர பாராளுமன்றத்தில் அவரது திருவுருவப்படமும் திறக்க வேண்டும். அதற்காக பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் உறுதுணையாக இருப்போம். காரணம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்த மாநிலத்திலும் வழங்காத இடஓதுக்கீட்டை, தமிழகத்தில் மட்டும் 50 சதவிகிதம் கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கிய வீரமங்கை, இடஓதுக்கீட்டு வீராங்கனையின் புகழை மேன்மேலும் பறைசாற்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவை பாடுபடும், என்றார். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து