முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி மாவட்டம் கிராமங்களில் வசிக்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த 11 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி அமைச்சர் பா.பாலகிருஷ்ணாரெட்டி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி கரியசந்திரம், சிக்கரி மேடு, பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை நரசிம்மன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை வகித்தார். பின்பு அமைச்சர் சுழல் நிதி வழங்கி பேசும் போது

சுழல் நிதி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த குருபரப்பள்ளி ஊராட்சியின் சிக்காரி மேடு பகுதியில் வசிக்கும் நரிகுரவர் சழுதாயத்தினர் வேட்டையாட தடைசெய்யப்பட்ட விலங்கான உடும்பு பிடிப்பதை தவிர்க்கும் பொருட்டும் வேறு தொழில் செய்யும் பொருட்டும் (மணி கோர்த்தல் பிளாஸ்டிக் மாலை மற்றும் பூங்கொத்து செய்தல்) 120 பெண்களை 6 குழுக்களை ஒருங்கிணைக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு முதல் கட்டமாக 50மூ தொகை மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியிலிருந்து தொழில் முதலீடாக ரூ.30,12,420ஃ- மட்டும் விடுவிக்கப்படுகிறது.

மேலும், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நெரிகம் ஊராட்சியில் கரிய சந்திரம் பகுதியில் வசிக்கும் நரிகுரவர் சமூகத்தை சேர்ந்த பெண்களை 5 சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து (மொத்தம் 98 பெண்கள்) சுய தொழில் செய்ய மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் முதல் கட்டமாக 50மூ தொகை ரூ.18,26,369ஃ- மட்டும் தொழில் செய்ய முதல் கட்டமாக விடுவிக்கப்படுகிறது.

இத்தொகை சுழல் நிதியாக உபயோகப்படுத்தப்பட வேண்டும். இத்தொகை சுய உதவிக்குழுவிற்கு விடுவிக்கப்படுகிறது பின்பு குழுவிலிருக்கும் பெண்களுக்கு விடுவிக்கப்படும். இத்தொகையை கொண்டு தொழில் செய்ய தேவையான பொருட்களை வாங்கி அதனை விற்று அதில் கிடைக்கும் லாபத்தை குழு அங்கத்தினர் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் முதலீடு தொகையை இப்பணிக்காக ஒவ்வொரு குழுவிற்கும் தனியாக துவக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் மீளவும் செலுத்தி, பிறகு மீளவும் எடுத்து உபயோகபடுத்திக்கொள்ளலாம் என்று அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியின் போது , முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மது (எ )ஹேம்நாத், சூளகிரி வட்டாட்சியர் பெருமாள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து