முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வர் பேட்டி

பாப்ஸ்கோ போராட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். அவரைப் பற்றி மட்டுமல்லாமல மற்ற காங்கிரஸ எம்எல்ஏக்கள் மற்றும் என்னைப் பற்றியும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அவர் என்ன பேசினார்? என்ற விபரங்களை சேகரித்து வருகிறோம். ஒரு மாநில கட்சி தலைவருக்கான தகுதி சாமிநாதனுக்கு இல்லை. ஒரு கட்சி தலைவர் என்றால் கொள்கையை பற்றி பேசலாம். அப்படி பேசினால் அவருக்கு உரிய பதிலடி கொடுப்போம். ஆனால் அதை விட்டு விட்டு தனிப்பட்ட முறையில் பெண் எம்எல்ஏவையும், எங்களையும் விமர்சித்து இருக்கிறார். அவருடைய செயல்பாடு கீழ்த்தரமாக அமைந்துள்ளது. அவர் இவ்வாறு மோசமாக பேசியதற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் இப்படி நடந்து கொள்வது அரசியல் நாகரீகத்திற்கு உகந்தது அல்ல. ஏகேடி ஆறுமுகம் தொடர்பான பிரச்சனை எங்கள் கட்சி பிரச்சனை. இது ஒரு குடும்ப பிரச்சனை போன்றது. எங்கள் குடும்ப பிரச்சனையை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். பிரதமர் வருகை தேதி மாற்றம் குறித்து எங்களுக்கு அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. 24-ந் தேதி வருவதாகத்தான் இதுவரை எங்களுக்கு தகவல் கிடைத்தள்ளது. அதே போல அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றியும் எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. காவிரியில் புதுவையின் பங்காக இருவரை 6 டிஎம்சி தண்ணீர் தான் வந்து கொண்டு இருந்தது. இப்போது 7 டிஎம்சி வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது புதுவைக்கு சாதகமானது என்பதால் இந்த தீப்பை வரவேற்றுள்ளோம். அதே போன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அந்த நீரை புதுவைக்கு கிடைக்க செய்ய வேண்டும். காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று கர்நாடக முதல்வர் சீத்தாராமையா சொல்வது தவறில்லை. அவர் காங்கிரஸ் கட்சி முதல்வராக இருந்தாலும் அவர் கருத்தை நாங்கள் எதிர்க்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இது இந்திய வரலாற்றில் நடந்துள்ள மிகப் பெரிய  ஊழல். இது சம்மந்தமாக மத்திய அரசு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தை லாபத்தில் இயக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து