விழிப்புணர்வு சுவர் சித்திரம் வரைதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      திருநெல்வேலி
drawing competition collector distribute the prize

திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவரில் திருநெல்வேலி மாநகராட்சியின் சார்பில்  தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு சுவர் சித்திரம் வரைதல் போட்டி  நடைபெற்றது.

பரிசளிப்பு விழா

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது. பரிசு மற்றும் கேடயங்கள் சரக்கு மற்றும் சேவை வரி இணை ஆணையர் அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி,  கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ்  மற்றும் பரிசு வழங்கினார்.பின்னர் கலெக்டர்  பேசியதாவது:-திருநெல்வேலி மாநகராட்சி ஏற்கனவே தூய்மையான மாநகராட்சிக்கான விருது பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தூய்மையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து உங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திட இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி சுற்று சுவர் பகுதி பேஸ்டர்கள் ஒட்டப்பட்டு சுகாதாரமின்றி இருந்தது. இச்சுவர் சித்திர போட்டியின் மூலம் விழிப்புணர்வு கருத்துகள் மிக அழகாக வரையப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும் சிறப்பாக விழிப்புணர்வு ஒவியங்களை வரைந்துள்ளீர்கள். நீங்கள் கூறியுள்ள கருத்துகளை நீங்களும் கடைபிடித்து உங்களது பள்ளி, வீடு மற்றும் பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பான பராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். என பேசினார்.தொடர்ந்து சரக்கு மற்றும் சேவை வரி இணை ஆணையர் நரேஷ்,இ.வ.ப.,  தலைமையில் கலெக்டர்  முன்னிலையில் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர்.பொற்செல்வன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கண்ணன், துணை முதல்வர் மரு.ரேவதி, சுகாதார அலுவலர்கள் சுப்பிரமணி, சாகுல்அமீது, முருகேசன், சுகாதார ஆய்வாளர் நடராஜன், இளங்கோ  மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து