குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோவிலில் புதுவை முதல்வர் நாராயணசாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2018      கன்னியாகுமரி
puthucherry cm swami dharsan ayya vaigundar avatharapathi temple in kumari district

அரசே காப்பீடு தொகையை செலுத்துவதால் மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி பெருமிதம் கொண்டார்.

தரிசனம்

புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று குமரி மாவட்டம் சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் திருக்கோவிலுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்தார். அப்போது கோவில் தர்மகர்த்தா பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்று பூரண கும்ப மரியாதையான தலைப்பாகை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் சாமித்தோப்பிலுள்ள அன்புவனத்தில் அமைக்கப்படவுள்ள அன்னதான மண்டபத்தில் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், கூடன்குளம் அணுமின் உலை ஆரம்பிக்கும் போது பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் என்னை அழைத்து கூடன்குளத்தில் அணுமின் உலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டு கெண்டனர். இதையடுத்து நான் கூடன்குளம் வந்து போராட்டக்காரர்களை அழைத்து பேசி கூடன்குளம் அணுமின் நிலையம் அமைய நடவடிக்கைகள் மேற்கொண்டேன். உற்பத்தியாகும் 1600 மெகா வாட் மின்சாரத்தில் ஒரு யூனிட் 90 பைசாவில் கிடைக்கிறது. தற்போது 2வது உலையும் திறக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலை உருவாகும். இன்னும் புதிதாக 4 உலைகள் வர இருக்கின்றன. கூடன்குளம் பகுதியிலுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி நடவடிக்கை மேற்கொண்டேன். திருவனந்தபுரத்திலுள்ள விண்வெளி ஆய்வு மையத்தை போல மகேந்திரகிரியில் இஸ்ரோவின் தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென அவர் கேட்டு கொண்டார். தொடர்ந்து சாமித்தோப்பு அய்யா வைகுண்டப்பதி தர்மகர்த்தாவான பாலபிரஜாபதி அடிகளாருக்கு ‘மடாதிபதி’ என்ற பட்டமும், செங்கோல் ஒன்றும் வழங்கி சிறப்பித்தார்.நிகழ்ச்சிக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுவையில் கடந்த 2 வருடங்களாக வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் கூட்டுக்கடனை ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் பயிர் காப்பீட்டுத் தொகையையும் மாநில அரசே வழங்கியது. ஆகவே தான் புதுவை மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை  இல்லை. புதுவை மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் நலத் திட்டப் பணிகள் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தாலும், எங்கள் அதிகாரத்தில் பல இடையூறுகள் இருந்த போதும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியும், மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைப்பதும், தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், புதுவை மாநிலத்துக்கு 1850 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் இடையேயான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். டெல்லி நாட்டின் தலைநகராக இருந்தாலும் சட்டம், ஒழுங்கு, நிதி, நிர்வாகம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. புதுவையையும், டெல்லியையும் ஒன்றாக இணைத்து இப்போது உள்ள பாஜக அரசு பார்க்கிறது.  கெஜ்ரிவாலை போன்று என்னையும் பார்க்கிறார்கள். நான் வேறு என்று அவர்களுக்கு புரியவில்லை. புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகவே தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் விடப்பட்டுள்ளது. இதுபோல் பஸ் போக்குவரத்து துவங்கப்படும் என்ற அவர், விஜயதரணி எம்.எல்.ஏ குறித்த கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார். எங்கள் மாநிலத்தை பொறுத்தவரை அமைச்சரவை எடுக்கும் முடிவை துணை நிலை ஆளுநர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டிய நிலையில் உள்ளோம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் புதிய கட்சிகள் ஆரம்பிக்க உள்ளனர். ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கவும், தேர்தலில் போட்டியிடவும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியமில்லை, என்றார் அவர். புதுச்சேரி முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் ஓபிசி பிரிவு தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் மகேஷ் லாசர், வட்டார தலைவர் ராஜஜெகன், விவேகானந்தா கல்லூரி தலைவர் துரைசாமி, செயலாளர் ராஜன், நாடார் மகாஜன சங்கத் தலைவர் கருங்கல் ஜார்ஜ், சாமித்தோப்பு பதியை சார்ந்த தர்மகர்த்தாக்கள் வக்கீல் பால ஜனாதிபதி, லோகாதிபதி, பையன்ராஜா, லோக் பாலபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Bigg Boss 2 Tamil | Bigg Boss Day 1 Promo 3 | 18.06.2018

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

ரம்ஜான் பிரியாணி | Ramzan Special Chicken Biryani in Tamil | Iftaar Special Biryani Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து