முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழாவிற்கு ராமேசுவரம் பகுதியிலிருந்து குழந்தைகள் உள்பட 1920 பக்தர்கள் படகில் பயணம்: கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,-  கச்சத்தீவில் இரண்டு நாட்கள் நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழாவிற்கு இந்திய பகுதியிலிருந்து குழந்தைகள் உள்பட 1020 பக்தர்கள் ராமேசுவரம் துறைமுகப்பகுதியிலிருந்து 60 படகில் நேற்று புறப்பட்டு சென்றனர். 
 இந்திய,இலங்கை ஆகிய இருநாட்டை சேர்ந்த பக்தர்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவிலுள்ள புனிதஅந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா நேற்று தொடங்கியது.இந்த திருவிழாவிற்கு செல்வதற்காக இந்தியாவில் தமிழகப்பகுதிகள் உள்பட வெளி மாநிலத்திலிருந்து 2105 பக்தர்கள் விண்ணப்பிந்திருந்தனர்.இதையடுத்து காவல்துறை விசாரணைக்கு பின்பு பல்வேறு காரணங்காளக 8 விண்ணப்பத்தை போலீஸார் நிரகாரித்தனர்.இதன் பின்னர் 2098 பக்தர்கள் திருவிழாவிற்கு செல்ல அனுமதி சீட்டு ராமேசுவரம் வட்டாட்சியர் சார்பில் வழங்கப்பட்டது.இதையடுத்து ராமேசுவரம் துறை முகப்பகுதியிலிருந்து 60 படகில் ஆண் பக்தர்கள் 1532 பேரும்,பெண் பக்தர்கள் 336 பேரும்,ஆண் குழந்தைகள் 29 பேரும்,ஆண் குழந்தைகள் 23 பேரும் சேர்த்து மெத்தம் 1920 பக்தர்கள் நேற்று காலையில் புறப்பட்டு சென்றனர்.இதனை தொடர்ந்து முன்னதாக முதல் படகில் சென்ற பக்தர்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வரவேற்று கை குளுக்கி வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.அதன் பின்னர் படகுகள் வரிசையாக பக்தர்களை ஏற்றி சென்றன.முன்னதாக பக்தர்களை பல அடுக்கு பிரிவுகளாக காவல்துறை,வருவாய்த்துறை,மத்திய,மாநில போலீஸார்கள்,சுங்கத்துறை ஆகியோர்கள் பலத்த சோதணை செய்த பின்னரே பக்தர்களை திருவிழாவிற்கு   படகில் புறப்பட்டு சென்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து