நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      தூத்துக்குடி
school annual day celebration

நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப் பள்ளியின் 21வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளி ஆண்டு விழா

விழாவினை நாசரேத் அசெம்பளி ஆப் காட் சபை மூத்த குருவானவர் எட்வின் பிரபாகர் ஜெபத்துடன் ஆரம்பித்து வைத்தார். பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் சிறப்பு விருந்தினர் அனைவரையும் வரவேற்று பொன்னாடை போர்த்தினார். மாணவர் தேவராஜ் உறுதிமொழி கூறினார். மாணவி அனிஷா ஓய்ஸ்லின் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளி நிர்வாகி பியுலா சாலமோன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அனி ஜெரால்டு ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர் வல்லபாய் ராஜய்யா கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர் பியுலா வல்லபாய் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களின் பெயரை உதவி முதல்வர் மகிலா சரவணன் வாசிக்க ஜெபா செல்வன் பரிசுகளை வழங்கினார். பள்ளி ஆண்டு விழாவில் மாணவ மாணவியர்களின் நடனம், நாட்டியம், நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி தலைவர் சத்தியவதி மனோகரன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவி ஷெர்லினா கிரேஸ் நன்றியுரை கூறினார். நாட்டுப்பண் முழங்க விழா இனிதே நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து