ஆரணியில் மொத்த காய்கறி மார்க்கெட் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2018      வேலூர்
a VEGETABLE

 

ஆரணி அண்ணாசிலை அருகில் மொத்த காய்கறி மார்க்கெட் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆரணி மார்க்கெட் வளாகத்தில் 60ஆண்டுகளாக இயங்கி வந்த மொத்த காய்கறி வியாபாரம் ஞாயிற்றுக்கிழமை ஆரணி அண்ணாசிலை சூரியகுளம் அருகில் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலா மொத்த காய்கறி மார்க்கெட் என்று பெயர் வைக்கப்பட்டு முதல் விற்பனையை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

வந்திருந்த அனைவரையும் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சுபானி வரவேற்றார். உடன் செய்யார் எம்எல்ஏவும், மாவட்டசெயலாளருமான தூசி கே.மோகன், ஆரணி எம்.பி செஞ்சி வே.ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், நகரசெயலாளர் அசோக்குமார், ஒன்றியசெயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, நகர நிர்வாகி பாரிபாபு, பலசரக்கு மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் வி.நடராஜமுதலியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து