ஸ்டெர்லைட் காப்பர் சார்பில் உலக மகளிர் தின விழா

வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2018      தூத்துக்குடி
womens day celebration at sterlite coppe

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட உலக மகளிர் தினவிழா நடைபெற்றது

உலக மகளிர் தினவிழா

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தனது சமுதாய வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கல்வி,சுகாதாரம், மருத்துவம், பெண் கல்வி மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது ஸ்டெர்லைட் காப்பர் கடந்த 2005ம் ஆண்டு முதல் மகளிர்  மேம்பாட்டு திட்டமான சகி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. மகளிர் மேம்பாட்டுக்காக சகி என்ற திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறுதொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு தொழில் தொடங்க செய்து பொருளாதாரரீதியாக அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. சகி திட்டத்தின் மூலம்  இரண்டாயிரம் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அதன் மூலம்  சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாகி பயன்பெற்று வருகின்றனர். பெல் கல்வி மற்றும் பெண்கள் நலக்கழகம், துளசி சமூக அறக்கட்டளை மற்றும் தாயகம் சமூக நல அறக்கட்டளை  ஆகிய தொண்டு நிறுனங்களுடன் இணைந்து சகி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.சகி திட்டத்திலுள்ள மகளிர் சுயஉதவி குழு பெண்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், அவர்களில் சிறந்த தொழில் முனைவோர்களை உற்சாகபடுத்தும் வகையில் ஆண்டு தோறும் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டின் உலக மகளிர் தினவிழா ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் தலைமை வகித்தார். சென்னையிலுள்ள சிசில் அன் எவால்வ் அமைப்பின் நிறுவன தலைவர் தொலைக்காட்சி பேச்சாளர் ஷியாமளா ரமேஷ் பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்டெர்லைட் நிறுவன மனிதவளத்துறை தலைவர் கேப்டன் சோனிகா முரளீதரன்  ஸ்டெர்லைட் நிறுவன இணை துணை தலைவர் எ. சுமதி  அரசின் தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பி.ரேவதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பாக தொழில் செய்த மகளிர்குழுக்கள் மற்றும்  குழுவை சார்ந்த தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  சில்வியா ஜாண்,பி.எஸ்.எஸ் குழும இயக்குநர் வெயிலா கே.ராஜா, டி.எஸ.எப் குழுமத்தின் மேலாண் இயக்குநர் மல்கிஜா திவ்யா, பியர்ல் ஷிப்பிங் ஏஜன்சி நிதித்துறை தலைவர் நிவேதிதா ஈ.ராபின் போன்ற மகளிர் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் டாக்டர் கைலாசம், மேலாளர் சுகந்தி செல்லத்துரை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து