சந்தூர் கிராமத்தில் எருது விடும் விழா 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

புதன்கிழமை, 14 மார்ச் 2018      கிருஷ்ணகிரி
kk 1

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் சந்தூர் கிராமத்தில் நேற்று 2வது ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது. காலை 8 மணி முதல் தொடங்கிய எருதுவிடும் விழாவில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 260க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. விழாவில் நடைபெறும் பகுதியில் விதிமுறைகள் பின்பற்றபடுகிறதா என்பதை போச்சம்பள்ளி வட்டாட்சியர் கோபிநாத், துணை வட்டாட்சியர் அனிதா, வருவாய் ஆய்வாளர் செல்வராஜ், விஏஓ ராகேஷ்சர்மா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து விழாவில் பங்கேற்ற காளைகளுக்கு க ால்நடைமருத்துவ அலுவலர் லதா தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

எருது விடும் விழா

 

இவ்விழாவில் ஒவ்வொரு காளைகளையும் ஒரு குறிப்பிட்ட தூரம் ஓட விட்டு, அது எவ்வளவு வேகத்தில் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அதில் எந்த எருது அந்த தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடக்கிறதோ அந்த எருதின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், முதன்முறையாக எருதுகள் ஓடும் தூரம் கணினி மூலம் பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்யப்பட்டது. இதனை மத்தூர் உடற்கல்வி இயக்குநர் சஞ்சீவ்குமார் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் வடிவேலு, ராமன், அண்ணாதுரை ஆகியோர் மேற்கொண்டனர். அதன்படி 110 மீட்டர் தூரத்தை ஜோலார்பேட்டை மின்னல் ராணிக்கு என்பவருக்கு சொந்தமான காளை 10. 2 விநாடிகளில் கடந்து 20 கிராம தங்க காசுகளை வென்றது. இதே போல் குறைந்த விநாடிகளில் கடந்த 67 காகைளின் எருதுகளுக்கு பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தயார் நிலையில் இருந்து மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர். விழாவை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால், போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து