5 புதிய நீதிமன்றங்கள் மற்றும் கூடுதல் உரிமையியல் நீதிபதி குடியிருப்புகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      கன்னியாகுமரி
5 new courts and additional rights judiciary houses Chennai High Court Chief Justice Indrapanarji Minister CV Shanmugam

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 புதிய நீதிமன்றங்கள் மற்றும் இரணியலில் கூடுதல் உரிமையியல் நீதிபதி குடியிருப்புகளை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் இந்திராபானர்ஜி   சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  முன்னிலையில்  திறந்து வைத்தார். இவ்விழாவில்  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசியதாவது:-

நீதிமன்றங்கள் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரில் இன்று ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவுநீதிமன்றம்), ஒரு குடும்பநல நீதிமன்றம், ஒரு கூடுதல் மகளிர் நீதிமன்றம், பத்மநாபபுரம் நகரில் இரண்டாவது குற்றவியர் நடுவர் நீதிமன்றம், இரணியல் நகரில் ஒருவிரைவு நீதிமன்றம் ஆகிய 5 புதிய நீதிமன்றங்கள் துவக்க விழா மற்றும் இரணியல் கூடுதல் உரிமையியல் நீதிபதிக்கான புதிய குடியிருப்பு திறந்து வைக்கப்படும் விழாஆகிய 6 விழாக்களும் ஒன்று சேர நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.கடந்த 2015-16 ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத தொடரில்  புரட்சித்தலைவி அம்மா 25.09.2015 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் உட்பட 10 இடங்களில் மாவட்ட நீதிபதி பதவி தரத்தில், 10 விரைவு நீதிமன்றங்கள் ரூ.5.32 கோடி செலவில் அமைக்கப்படும். மேலும், பத்மநாபபுரத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.இவ்வறிவிப்புகளை தொடர்ந்து 28.12.2015 அன்று நாகர்கோவிலில் ஒரு புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் (விரைவு நீதிமன்றம்) ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 9 பணியாளர்களுடன் ரூ.103.6 இலட்சம் செலவில் உருவாக்கவும், அதுபோன்று 23.12.2015 அன்று பத்மநாபபுரத்தில் ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 16 பணியாளர்களுடன் ரூ.67.66 இலட்சம் செலவில் உருவாக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த 26.12.2016 அன்று 4 கட்டங்களாக 15 குடும்ப நல நீதிமன்றங்களை ஒரு மாவட்ட நீதிபதி உட்பட 23 பணியாளர்களுடன் ரூ.19.46 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக கன்னியாகுமரி மாவட்டம்  உட்பட 4 மாவட்டங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிடப்பட்டது.கடந்த 05.04.2017 அன்று 22 கூடுதல் மகளிர் நீதிமன்றங்களை 2 கட்டங்களாக ஒரு குற்றவியல் நீதிபதி உட்பட 7 பணியாளர்களுடன் ரூ.6.61 கோடி செலவில் உருவாக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு அதில் முதல் கட்டமாக நாகர்கோவில் உட்பட 11 இடங்களில் இந்த வருடம் உருவாக்க உத்தரவிட்டது. அதுபோன்று கடந்த 22.04.2016 ஆம் ஆண்டு இரணியல் நகரில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நிதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேங்கியிருப்பதை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் அமையவிருந்த இரண்டாவது விரைவு நீதிமன்றத்தை இரணியலுக்கு மாற்றம் செய்ய ஆணையிடப்பட்டது. இவ்வாணைகளை தொடர்ந்து இன்று இந்த 5 நீதிமன்றங்களும் தொடங்கி வைக்கப்படுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மேலும், 25.05.2015 அன்று இரணியலில் அமைந்துள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி அவர்களுக்கு ரூ.14.11 இலட்சம் செலவில் குடியிருப்பு கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வாணையை தொடர்ந்து அந்த குடியிருப்பு கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டதிலும் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அதுமட்டுமில்லாமல் இப்புதிய 5 நீதிமன்றங்களும் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் மற்றும் நீதிபதிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த ஜயமும் இல்லை. இதற்காக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்களுக்கும், மாண்புமிக தமிழக முதல்வர் அவர்களுக்கும், உயர் நீதிமன்றத்திற்கும்  என்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.தற்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் 15 நீதிமன்றங்கள் நாகர்கோவிலிலும், 6 நீதிமன்றங்கள் குழித்துறையிலும், 4 நீதிமன்றங்கள் பத்மநாபபுரத்திலும், 2 நீதிமன்றங்கள் இரணியலிலும், 1 நீதிமன்றங்கள் பூதப்பாண்டியிலும் இயங்கி வருகின்றன. இந்த 28 நீதிமன்றங்களும் சொந்த கட்டிடங்களில் இயங்குகின்றன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை சுதந்திரமாக செயல்படவும், மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்கவும், தேவையான அனைத்து இடங்களிலும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி நீதிமன்றங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு  முதல்வர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் நீதி நிர்வாகத்தில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து                             2 வது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தற்பொழுது அம்மாவின் வழியில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வரும் இவ்வரசு தமிழகத்தில் பல புதிய நீதிமன்றங்கள் உருவாக்கவும், நீதிமன்ற கட்டிடங்கள் அமைக்கவும், புதிய பணியிடங்கள் உருவாக்கவும், நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.659.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரலாற்று சாதனையாகும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.புரட்சித்தலைவி அம்மா கடந்த ஆட்சியில் மொத்தம் 223 புதிய நீதிமன்றங்களை ரூ.72.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உருவாக்க ஆணை பிறப்பித்தார்கள். இவ்வாறு உருவாக்க ஆணையிடப்பட்டுள்ள 223 நீதிமன்றங்களில் 150 நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 5 நீதிமன்றங்கள் தொடங்க  அம்மா ஆணையிட்டிருந்தார்கள்.  அம்மாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டுவரும் இந்த அரசு இதுவரை 197 புதிய நீதிமன்றங்களை ரூ.122.63 கோடி செலவில் உருவாக்குவதற்கு ஆணை பிறப்பித்து சாதனையை புரிந்துள்ளது. இவைகளில் 4 நீதிமன்றங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடங்கும். அதில் 2 நீதிமன்றங்கள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சார்பு நீதிமன்றங்கள் 18 (நாகர்கோவில்), கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் 11, கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் 18, மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் 6, மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் 20 (நாகர்கோவில்), குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் 15 (நாகர்கோவில்), தாலுக்கா நீதிமன்றங்கள் 51 மற்றும் 54 சிறப்பு நீதிமன்றங்களும் அடங்கும்.மிழகத்தில் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களான, 4 விடுமுறைகால குடும்பநல நீதிமன்றங்களும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு அசல் மனு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் தமிழகத்தில் மொத்தம் 32 உள்ளது. ஊழல் தடுப்புசட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க அமைந்துள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்களும், மகளிர் நீதிமன்றங்கள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றங்களில் நாமக்கல் உட்பட 22 நீதிமன்றங்களும், சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களையும் மகளிர் நீதிமன்றங்களே விசாரிக்கலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளதால், இத்தகைய குற்றங்கள் உடனடியாக தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது. சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.7 கோடிசெலவில் நிறுவப்பட்டது.இன்று தமிழகத்தில் 88 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றது. புதிய நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பது, நீதிபதிகளக்கான குடியிருப்புகள், கூடுதல் கட்டிடங்கள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த ஆட்சியில் ரூ.636.36 கோடி மதிப்பிலான 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை  அம்மா செயல்படுத்தியுள்ளார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் அரசு அல்லது சொந்த கட்டடங்களில் இயங்க வேண்டும் என்ற  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவு மிக விரைவில் நனவாகும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு  சட்டம், நீதிமன்றங்கள் மற்றும்  சிறைச்சாலைத்துறை அமைச்சர் பேசினார்.

இவ்விழாவில்  சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் முனைவர் விமலா,  சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் நிஷா பானு,   சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சேஷசாயி,  சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கருப்பையா, கூடுதல் ஆட்சியர்                               ராஹ_ல்நாத்  பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் (திருநெல்வேலி) ஆசை தம்பி, வருவாய் கோட்டாட்சியர் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து